New Smart Card latest News announcement by TN Govt
New Smart Card latest News announcement by TN Govt ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழக அரசு என்ன தெரியுமா?
தமிழகத்தை பொறுத்தவரையில் அனைத்து மாவட்டங்களிலும் சுமார் 2 கூடிய 24 லட்சத்து 13 ஆயிரத்து 920 மின்னணு குடும்ப அட்டைகள் உள்ளன.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
இதில் முழு நேர நியாய விலை கடைகள் தமிழக முழுவதும் 26 ஆயிரத்து 520 செயல்பட்டு வருகின்றது மேலும் மக்கள் தொகை குறைவாக உள்ள பகுதிகளில் பகுதி நேர ரேஷன் கடைகள் 10,452 என மொத்த கடைகளின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 954 ஆக உள்ளது.
மேலும் ரேஷன் அட்டைகளிலும் பல வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது அந்த வகையில் சர்க்கரை அட்டை வெள்ளை நிற அட்டை, இளஞ்சிவப்பு, பச்சை நிற அட்டை, நீல நிற அட்டை என பல வகைகள் பிரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சுமார் இரண்டு வருடங்களாக புதிதாக ரேஷன் அட்டை விண்ணப்பித்து காத்திருப்பவரின் எண்ணிக்கை சுமார் மூன்று லட்சத்தை நெருங்கும் நிலையில் உள்ளது.
தமிழக அரசு தேர்தல் மற்றும் பல்வேறு காரணங்கள் காரணமாக சுமார் ஒன்றை ஆண்டு காலமாக புதிய குடும்ப அட்டைகள் விநியோகிக்கும் பணியை நிறுத்தி வைத்திருந்தது.
தற்போது முதற்கட்டமாக 92 ஆயிரம் புதிய ரேஷன் அட்டை விண்ணப்பதாரர்களுக்கு ரேஷன் கார்டு புதிதாக வழங்க ஒப்புதல் ஆணையானது வழங்கப்பட்டுள்ளது.
தற்போது வரை சுமார் 80 ஆயிரம் பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது மீதமுள்ளவளுக்கும் தொடர்ந்து வழங்கப்பட உள்ளது.
இதனிடையே 2.80 லட்சம் பேர் விண்ணப்ப திருத்த நிலையில் சும்மா ஒரு லட்சம் பேருக்கு மட்டும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது மீதமுள்ளவருக்கு விரைவில் சரிபார்க்கும் பணியானது முடிந்து புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே தமிழகத்தில் புதிதாக ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு மிக விரைவாக ரேஷன் அட்டை கிடைக்கும் என்ற மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது.
உங்கள் புதிய ரேஷன் அட்டை தற்போதைய நிலையை அறிய இங்கே கிளிக் செய்யவும் https://www.tnpds.gov.in/