Today Rasi Palan 24.06.2025
Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஆனி: 10 செவ்வாய் கிழமை 24.06.2025 ராசி பலன்கள்
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
இன்றைய ராசி மற்றும் நட்சத்திர பலன்கள்

🔯 மேஷம் -ராசி: 🐐
குழந்தைகள் ஒத்துழைப்பாகச் செயல்படுவார்கள். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும். பலம் மற்றும் பலவீனங்களைப் புரிந்துகொள்வீர்கள். நண்பர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய தொழில் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். செலவு நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு நிறம்.
⭐️அஸ்வினி : ஒத்துழைப்பு கிடைக்கும்.
⭐️பரணி : மகிழ்ச்சியான நாள்.
⭐️கிருத்திகை : வாய்ப்புகள் அமையும்.
♉ ரிஷபம் – ராசி: 🐂
விமர்சனப் பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். பழைய விஷயங்களால் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்படும். ஜாமீன் விஷயங்களைத் தவிர்ப்பது நல்லது. தொழில் நிமித்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் சற்று கவனத்தோடு செயல்பட வேண்டும். சஞ்சலமான சிந்தனைகளால் ஒருவிதமான குழப்பங்கள் ஏற்படும். அனுபவம் மேம்படும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : அடர்மஞ்சள் நிறம்.
⭐️கிருத்திகை : தடுமாற்றம் ஏற்படும்.
⭐️ரோகிணி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
⭐️மிருகசீரிஷம் : குழப்பங்கள் ஏற்படும்.
♊ மிதுனம்- ராசி: 🤼♀
வெளியூர் பயணங்கள் சாதகமாக முடியும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். உடலில் ஒருவிதமான அசதிகள் ஏற்பட்டு நீங்கும். தடைப்பட்ட பேச்சுக்கள் கைகூடும். கடன் சார்ந்த விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். எதிலும் நிதானத்துடன் செயல்படவும். ஆதரவு நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்.
⭐️மிருகசீரிஷம் : சாதகமான நாள்.
⭐️திருவாதிரை : அசதிகள் நீங்கும்.
⭐️புனர்பூசம் : நிதானம் வேண்டும்.
♋ கடகம் – ராசி: 🦀
மற்றவர்களின் எண்ணங்களைப் புரிந்து செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் லாபகரமான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். நினைத்த காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.
⭐️புனர்பூசம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
⭐️பூசம் : முன்னேற்றம் ஏற்படும்.
⭐️ஆயில்யம் : பக்குவம் உண்டாகும்.
♌ சிம்மம் – ராசி: 🦁
வியாபாரப் பணிகளில் வித்தியாசமான முயற்சிகளின் மூலம் முன்னேற்றத்தை உண்டாக்குவீர்கள். கல்வி பணிகளில் மேன்மை ஏற்படும். உடல் ஆரோக்கியம் சீராகும். சமூகப் பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். நிர்வாகத் திறமை மேம்படும். குழந்தைகளின் எண்ணங்களைப் புரிந்துகொள்வீர்கள். சொந்த ஊர் தொடர்பான பயணங்கள் மேம்படும். ஜெயம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்.
⭐️மகம் : முன்னேற்றாமான நாள்.
⭐️பூரம் : அனுபவம் கிடைக்கும்.
⭐️உத்திரம் : பயணங்கள் மேம்படும்.
♍ கன்னி – ராசி: 👩
உறவுகள் வழியில் அனுசரித்துச் செல்லவும். விவசாயப் பணிகளில் ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் அமையும். எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். ஆன்மிகப் பணிகளில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். போட்டிகள் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் நிறம்.
⭐️உத்திரம் : அனுசரித்துச் செல்லவும்.
⭐️அஸ்தம் : வரவுகள் உண்டாகும்.
⭐️சித்திரை : ஆர்வம் ஏற்படும்.
இன்றைய ராசிபலன்
♎ துலாம் – ராசி: ⚖
மனதளவில் ஒருவிதமான குழப்பம் உண்டாகும். வழக்கு தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். மற்றவர்கள் செயல்களில் தலையிடாமல் இருக்கவும். உடன்பிறந்தவர்களால் அலைச்சல்கள் ஏற்படும். பணி நிமித்தமான விஷயங்களைப் பகிராமல் இருக்கவும். எதிர்பாராத சில பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். கனிவு வேண்டிய நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.
⭐️சித்திரை : குழப்பமான நாள்.
⭐️சுவாதி : அலைச்சல்கள் ஏற்படும்.
⭐️விசாகம் : அனுபவம் கிடைக்கும்.
♏ விருச்சிகம் – ராசி: 🦂
மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். சகோதரர்களின் வழியில் உதவிகள் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். வாகன பழுதுகளைச் சரிசெய்வீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துகொள்வீர்கள். வழக்கு விஷயங்களில் திடீர் திருப்பங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.
⭐️விசாகம் : நம்பிக்கை பிறக்கும்.
⭐️அனுஷம் : புரிதல் உண்டாகும்.
⭐️கேட்டை : வாய்ப்புகள் கிடைக்கும்.
♐ தனுசு – ராசி: 🏹
தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். உறவுகளின் மத்தியில் செல்வாக்கு உயரும். அரசு விஷயங்களில் அனுகூலம் ஏற்படும். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபார ஒப்பந்தங்களில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். உத்தியோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் ஏற்படும். உயர்வு பிறக்கும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்.
⭐️மூலம் : நெருக்கடிகள் குறையும்.
⭐️பூராடம் : மகிழ்ச்சியான நாள்.
⭐️உத்திராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
♑ மகரம் – ராசி: 🦌
தற்பெருமையான பேச்சுக்களைக் குறைத்துக் கொள்ளவும். குணநலன்களின் சில மாற்றம் ஏற்படும். வித்தியாசமான எண்ணங்களும், முயற்சிகளும் அதிகரிக்கும். எதிலும் ஆர்வமின்மையான சூழல் அமையும். வியாபார பயணங்களில் புதிய அனுபவம் ஏற்படும். அலுவலகத்தில் பொறுமை காப்பது நல்லது. பகை விலகும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.
⭐️உத்திராடம் : மாற்றம் ஏற்படும்.
⭐️திருவோணம் : ஆர்வமின்மையான நாள்.
⭐️அவிட்டம் : பொறுமை வேண்டும்.
♒ கும்பம் – ராசி: 🍯
குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும். வீட்டினை மனதிற்குப் பிடித்த விதத்தில் மாற்றி அமைப்பீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நவீன மின்னணு சாதனங்களை வாங்குவீர்கள். மறைமுகப் போட்டிகளைச் சமாளிப்பதற்கான பக்குவம் உண்டாகும். அலுவலகத்தில் சில சலுகைகள் கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.
⭐️அவிட்டம் : ஆதரவுகள் கிடைக்கும்.
⭐️சதயம் : விருப்பம் நிறைவேறும்.
⭐️பூரட்டாதி : சலுகைகள் கிடைக்கும்.
♓ மீனம் – ராசி: 🐟
திட்டமிட்ட பணிகளில் சிறுசிறு மாற்றங்கள் ஏற்படும். அக்கம், பக்கம் வீட்டாரின் ஒத்துழைப்பு கிடைக்கும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும். மாறுபட்ட அணுகுமுறைகளால் தடைகளை வெற்றிகொள்வீர்கள். சவாலான வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். மனதளவில் தைரியம் கூடும். ஜெயம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.
⭐️பூரட்டாதி : மாற்றங்கள் ஏற்படும்.
⭐️உத்திரட்டாதி : வெற்றிகரமான நாள்.
⭐️ரேவதி : தைரியம் அதிகரிக்கும்.
Today Trending News Tamil Click