TNPSC குரூப் 4 தேர்வுக்கான காலி இடங்கள் மேலும் அதிகரிக்கப்படுமா? வெளியான மகிழ்ச்சி தகவல்! உடனே படிச்சு பாருங்க!.. Group 4 Exam Vacancy Increasing Says About TNPSC Sep 19

TNPSC குரூப் 4 தேர்வுக்கான காலி இடங்கள் மேலும் அதிகரிக்கப்படுமா? வெளியான மகிழ்ச்சி தகவல்! உடனே படிச்சு பாருங்க..

Group 4 Exam Vacancy Increasing Says About TNPSC Sep 19

Group 4 Exam Vacancy Increasing Says About TNPSC Sep 19: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் ஏற்கனவே 480 பணியிடங்கள் கூடுதலாக அறிவிக்கப்பட்டிருந்தன. இதன் மூலம் குரூப்-4 தேர்வுக்கான காலி இடங்களின் எண்ணிக்கையானது 6724 ஆக உயர்ந்தது.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin
Group 4 Exam Vacancy Increasing Says About TNPSC Sep 19
Group 4 Exam Vacancy Increasing Says About TNPSC Sep 19

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்கள் அதிகரிப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த மாதம் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

கிராம நிர்வாக அலுவலர், பில் கலெக்டர் ,ஆவின் நிர்வாக உதவியாளர், இளநிலை நிர்வாகி ,வன காவலர் ,தட்டச்சர் சுருக்கெழுத்து தட்டச்சர் ,நேர்முக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான குரூப்-4 தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது நடத்தி வருகிறது .இதனைத் தொடர்ந்து தற்போது தமிழகத்தில் காலியாக உள்ள 6244 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு கடந்த ஜூன் 9ஆம் தேதி நடைபெற்றது.

இந்தத் தேர்வுக்கு சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் 7247 மையங்களில் 15.8 லட்சம் தேர்வர்கள் தேர்வு எழுதி இருந்தனர் .அதன் பின்னர் குரூப்-4 தேர்வில் கூடுதலாக 480 பணியிடங்கள் சேர்க்கப்பட்டன. இதன் மூலமாக குரூப் 4 தேர்வுக்கான காலி இடங்களின் எண்ணிக்கை 6724 ஆக உயர்ந்தது.

Group 4 Exam Vacancy Increasing Says About TNPSC Sep 19

இந்த நிலையில் குரூப்-4 தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் மேலும் அதிகரிக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் கோரிக்கைகள் வந்த நிலையில், தற்போது அதற்கான கணக்கெடுப்பு நடைபெற்று வருவதாகவும் அக்டோபர் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் டிஎன்பிஎஸ்சி தரப்பில் தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளது.

Group 4 Exam Vacancy Increasing Says About TNPSC Sep 19

எனவே இந்த காலி பணியிடங்கள் அதிகரிக்கும் பட்சத்தில் கட் ஆப் மதிப்பெண்கள் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணி இடங்களை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும் TNPSC மூலம் நிரப்பப்படும் பணியிடங்களின் எண்ணிக்கையை 15,000 ஆக உயர்த்த வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Comment