திருமலை திருப்பதி சீனிவாச பெருமாள் தரிசனம் செய்ய முன்பதிவு தேதி அறிவிப்பு Tirupati Brahmotsavam tickets October 2024

Tirupati Brahmotsavam tickets October 2024

திருமலை திருப்பதி சீனிவாச பெருமாள் தரிசனம் செய்ய முன்பதிவு தேதி அறிவிப்பு

Tirupati Brahmotsavam tickets October 2024 உலகப் புகழ்பெற்ற திருமலை திருப்பதி சீனிவாச பெருமாள் தரிசனம் செய்ய முன்பதிவு செய்யும் தேதியானது அறிவிக்கப்பட்டுள்ளது டிசம்பர் மாதத்தில் நடக்கும் சேவா தரிசனங்களுக்கான முன்பதிவு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல புரட்டாசி மாதம் பெருமாளை தரிசிக்க வழிவதை செய்யப்பட்டுள்ளது அதைப் பற்றிய முழு விவரம் நாம் இப்போது பார்க்கலாம்.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin
Tirupati Brahmotsavam tickets October 2024
Tirupati Brahmotsavam tickets October 2024

திருமலை திருப்பதி சீனிவாச பெருமாளை தரிசனம் செய்ய இலவச தரிசனம் மற்றும் 300 ரூபாய் கொடுத்து முன்பதிவு தரிசனம் செய்தல் மற்றும் ரூபாய் 500 செலுத்தி சேவா தரிசனங்கள் உள்ளிட்ட பல தரிசன சேவைகள் திருமலை திருப்பதி சீனிவாச பெருமாள் கோவிலில் நடைமுறையில் உள்ளது.  இந்த சேவைகளை ஆன்லைன் மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம் இந்த ஆன்லைன் முன்பதிவானது திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளம் மூலம் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்.

திருமலை திருப்பதி சீனிவாச பெருமாள் கோவிலில் விடியற்காலை அதிகாலை முதல் நள்ளிரவு வரை ஏராளமான சேவா தரிசனங்கள் மூலம் பக்தர்களுக்கு திருமலை திருப்பதி சீனிவாச பெருமாள் காட்சியளிக்கிறார். டிசம்பர் மாதம் சேவா தரிசனங்களை முன்பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது அதன்படி ஸ்ரீவாரி ஆஜித சேவைக்கும் முன்பதிவானது துவங்கி 20ஆம் தேதி காலை 10 மணி வரை நடைபெறுகிறது.

ஆஜித சேவைகளான கல்யாண ஊஞ்சல் உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவைகளுக்கான முன்பதிவு 21 ஆம் தேதி காலை 10 மணிக்கு துவங்குகிறது இதை பக்தர்கள் ஆன்லைன் வாயிலாகவே வீட்டிலிருந்து முன்பதிவு செய்யலாம். ஆன்லைன் வாயிலாகவே தரிசிக்கும் சேவைகளான கல்யாண உற்சவம் ஊஞ்சல் சேவா ஆர்ஜித பிரமோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை ஆகியவற்றுக்கான முன்பதிவு 21 ஆம் தேதி மாலை 3 மணிக்கு துவங்குகிறது. அங்கப்பிரதோஷண டோக்கன்கள் முன்பதிவு வரும் 23ஆம் தேதி காலை 10 மணிக்கு மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிக்கான தரிசன முன்பதிவு 23ஆம் தேதி மாலை 3 மணிக்கு துவங்குகிறது.

சிறப்பு தரிசன டிக்கெட் 300 ரூபாய் முன்பதிவானது 24ஆம் தேதி காலை 10 மணிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் அதேபோல திருமலை திருப்பதி தங்கும் விடுதி முன்பதிவானது 24ஆம் தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் துவங்குகிறது இவை அனைத்தும் டி டி டி TTT இணையதளத்தில் மட்டுமே பதிவு செய்ய முடியும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

புரட்டாசியில் எம்பெருமான் தரிசிக்க ஏற்கனவே ஆன்லைன் முன்பதிவுகளானது இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே முடிவடைந்து உள்ளது இருந்தாலும் புரட்டாசி மாதத்தில் பெருமாளை தரிசனம் செய்வதற்கான வழிவகைகள் செய்யப்பட்டுள்ளது அதைப்பற்றி முழுமையாக நாம் இப்போது பார்க்கலாம்.

புரட்டாசி மாதம் என்பது திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் உள்ள பெருமானுக்கு உகந்த மாதம் என்பதால் அந்த மாதம் முழுவதும் திருமலை திருப்பதியில் கூட்டம் நிரம்பி வழியும் மேலும் திருமலை திருப்பதியில் பிரம்மோற்சவம் ஆனது புரட்டாசி மாதத்தில் நடைபெறுகிறது இந்த பிரம்மோற்சவம் ஆனது அக்டோபர் மாதம் நான்காம் தேதி துவங்கி அக்டோபர் 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

புரட்டாசி மாதத்தில் எம்பெருமானை தரிசனம் செய்ய விரும்புவோர் ஸ்டால் தர்ஷன் உள்ளது இது இலவச தரிசனம் தான் திருமலை திருப்பதி ரயில் நிலையம் எதிரில் விஷ்ணு நிவாஸ் அலிபிரியில் பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகிய இரண்டு இடங்களில் தினசரி அதிகாலை 2 மணி முதல் தரிசன டோக்கன்கள் இலவசமாக வழங்கப்படுகின்றது அந்த டோக்கன்கள் வாயிலாக தரிசன டோக்கன் பெற்ற அன்றோ அல்லது அதன் மறுநாளோ எம்பெருமானை தரிசனம் செய்ய முடியும்.

சந்திரகிரியில் இருந்து ஸ்ரீவாரி மேட்டு வழியாக படியேறி தரிசனம் செய்ய செல்லும் பக்தர்களுக்கு காலை 6:00 மணிக்கு தினசரி 3000 டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றது அதேபோல அலிபிரியில் இருந்து காளி கோபுரம் வழியாக நடந்து செல்லும் பக்தர்களுக்கு தரிசனத்திற்கான டோக்கன்கள் வழங்கப்படுகின்றது.

Tirupati Brahmotsavam tickets October 2024
Tirupati Brahmotsavam tickets October 2024

இந்த தினசரி இலவச தரிசனம் முன்பதிவு பிரம்மோற்சவத்தை முன்னிட்டு காலம் நேரம் மாறுபட வாய்ப்பு இருக்கலாம் எம்பெருமானை தரிசனம் செய்யும் பக்தர்கள் இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.

Home Page

Leave a Comment