வீட்டில் இருந்தபடியே மாதம் ரூ. 20,000 சம்பாதிக்கலாம்.. இந்த போஸ்ட் ஆபீஸ் திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா?.. வாங்க தெரிஞ்சுக்கலாம்!..
SCSS Post Office Scheme Details 2024
SCSS Post Office Scheme Details 2024 நாம் எந்த வேலைக்கும் செல்லாமலேயே வீட்டில் இருந்தபடியே மாதம் ரூபாய் 20000 சம்பாதிக்கும் திட்டத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா? தபால் நிலையம் மூலமாக இந்த திட்டத்தை நாம் இணையலாம். இந்த திட்டத்தில் செய்யும் முதலீட்டுக்கு வேறு எங்கும் கிடைக்காத அளவு வட்டி கிடைக்கிறது.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
பணி ஓய்வுக்கு பின்னர் நிலையான வருமானம் கிடைப்பதற்கும் முதுமையில் ஏற்படும் செலவுகளை சமாளிப்பதற்கும் முன்கூட்டியே திட்டமிட்டு முதலீடு செய்வது அவசியமாகிறது. அஞ்சல் அலுவலகம் வழங்குகின்ற சேமிப்பு திட்டங்கள் இதற்கு தீர்வாக இருக்கும். குறிப்பாக மூத்த குடிமக்களுக்காகவே உள்ள தபால் நிலைய மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டமானது வேலைக்கு செல்லாமலேயே உத்திரவாதம் ஆன வருமானத்தை நமக்கு வழங்குகிறது.
இந்த திட்டத்தில் நாம் செய்கின்ற முதலீட்டுக்கு எட்டு சதவீதத்திற்கும் அதிகமான வட்டியானது வழங்கப்படுகிறது பிக்சட் டெபாசிட் திட்டங்களை விட அதிக வட்டி இத்திட்டத்திற்கு கொடுக்கப்படுகிறது. ஜனவரி 1 2024 முதல் இத்திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை 8.2% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இதன் மூலமாக முதுமையில் வீட்டில் இருந்தபடியே நாம் மாதம் ரூபாய் 20 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம்.
இத்திட்டத்தில் கணக்கு தொடங்கி குறைந்தபட்சம் ரூபாய் 1000 முதல் முதலீடு செய்யலாம். மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் அதிகபட்ச முதலீட்டு வரம்பு ரூபாய் 30 லட்சம் ஆகும். இந்தத் திட்டம் ஓய்வுக்குப் பிறகு உறுதியான வருமானம் மிகவும் உதவியாக இருக்கும். 60 வயது எட்டியவர்கள் தனியாகவோ கணவர் மனைவியுடன் சேர்ந்து கூட்டாகவோ கணக்கு தொடங்கலாம். இத்திட்டத்தின் கீழ் விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கு திட்டத்தில் சேர வயது வரம்பு தளர்வும் உண்டு.
அருகிலுள்ள எந்த தபால் நிலையத்தின் மூலமாகவோ மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்தில் நாம் சேரலாம். இந்த திட்டத்தில் ஐந்து ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டும். தேவைப்பட்டால் முன்கூட்டியே கணக்கையும் முடித்துக் கொள்ளலாம் ஆனால் அதற்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டும்.
இந்தத் திட்டத்தின் மூலம் கணக்கு வைத்திருக்கும் மூத்த குடிமக்களுக்கு வரி விளக்கும் கிடைக்கும். வருமான வரி சட்டத்தின் 80c பிரிவின் கீழ் ஆண்டுக்கு ரூபாய் 1.5 லட்சம் வரை வரிவிலக்கு பெறலாம். கணக்கு வைத்திருப்பவர் முதிர்வு காலத்திற்கு முன்பே இறந்து விட்டால் கணக்கு மூடப்பட்டு மொத்த பணமும் நாமினியிடம் ஒப்படைக்கப்படும்.
இந்த திட்டத்தில் அதிகபட்ச முதலீடான ரூபாய் 30 லட்சத்தை டெபாசிட் செய்தால் 8.2சதவீதம் வட்டி விகிதத்தின் அடிப்படையில் ஆண்டுக்கு ரூபாய் 2.46 லட்சம் வட்டி கிடைக்கும். அதாவது வீட்டில் இருந்தபடியே மாதம்தோறும் ரூபாய் 20 ஆயிரத்திற்கும் மேல் நாம் வருமானம் பெறலாம்.