ரூ.18000 உதவித்தொகை வழங்கும் தமிழக அரசின் சூப்பர் திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா?.. வாங்க பார்க்கலாம்!.. Dr.Muthulakshmi Maternity Benefit Scheme Details Tamil

ரூ.18000 உதவித்தொகை வழங்கும் தமிழக அரசின் சூப்பர் திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா?.. வாங்க பார்க்கலாம்!..

Table of Contents

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

Dr.Muthulakshmi Maternity Benefit Scheme Details Tamil

தமிழக அரசானது மகளிருக்கு என்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் மிகவும் முக்கியமாக மகளிர் உரிமைத் தொகை, பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம் போன்றவை குறிப்பிடத்தக்கவைகளாக உள்ளது, இந்த திட்டங்கள் கர்ப்பிணி தாய்மார்கள் பெண் குழந்தைகள் மற்றும் நலிவுற்ற பெண்களுக்கு நிதி உதவி கல்வி உதவி மற்றும் சுய வேலைவாய்ப்புக்கான வாய்ப்புகளை வழங்கி வருகிறது.

Dr.Muthulakshmi Maternity Benefit Scheme Details Tamil
Dr.Muthulakshmi Maternity Benefit Scheme Details Tamil

மகளிருக்கு என்று தமிழக அரசின் முக்கிய திட்டங்கள் 

தமிழக அரசு சார்பாக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது, இதில் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற திட்டமாக மகளிர் உரிமைத்துறை திட்டம் விளங்குகிறது, அந்த வகையில் மாதம் ரூபாய் 1000 உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது,

மேலும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளவர்கள் ரூபாய் 50 ஆயிரம் உதவி தேவை திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது இந்த 50000 பெண் குழந்தைகளின் பெயரில் வங்கியில் வைத்து வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் வாயிலாக பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்கும் சேமிப்பிற்கும் சிறந்த பயனாக விளங்கி வருகிறது.

மேலும் அதுமட்டுமின்றி அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கும் உயர்கல்வியில் இணையும் போதும் மாடு ரூபாய் ஆயிரம் உதவி தொகை திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது அது மட்டும் இல்லாமல் மகளிர் முன்னேற்றத்திற்காக 50,000 மானியம் வழங்குவதற்காக திட்டத்தையும் தமிழக அரசாங்க அறிவித்துள்ளது

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம்

கணவனை கைவிடப்பட்ட பெண்கள் கைம்பெண்கள் மற்றும் பேரிடம் பெண்கள் நலிவுற்ற பெண்களுக்கு என 50000 மானியமாக வழங்கப்பட உள்ளது 200 பயனாளிகளுக்கு சுய தொழில் செய்வதற்கான 50 ஆயிரம் ரூபாய் செயல் தொழில் செய்து சுயமரியாதையுடன் வாழ்வதற்கு ஒரு கோடி வரை மானியம் வழங்கப்படுவதற்கான அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இப்படி பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகின்ற நிலையில் சுகாதாரத்துறை சார்பாக டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம் ஆனதும் பல ஆண்டு காலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலமாக கர்ப்பம் அடைந்த பெண்களுக்கு உதவித்தொகையாக ரூபாய் 18,000 வழங்கப்படுகிறது அந்த வகையில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நிதி உதவி திட்டத்தின் வாயிலாக ஏழை கர்ப்பிணி தாய்மார்களுக்கு கர்ப்ப காலத்தில் பேறுகால நிதி உதவி தேவையாக 12 ஆயிரம் ரூபாய் வந்து 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

ரூ. 18000 கர்ப்ப கால உதவித்தொகை

இந்த திட்டத்தின் வாயிலாக கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்கு இந்த நிதியானது உதவியாக உள்ளது குறிப்பாக ஊட்டச்சத்து உணவுகள் வழங்குவதற்கும் உதவியாக இருக்கும் எனக்கோளப்படுகிறது இந்த திட்டத்தின் மூலமாக கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஐந்து தவணை முறைகளில் 18 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது மேலும் 2000 ரூபாய் மதிப்பிலான ஊட்டச்சத்து பரிசு பெற்றதும் பெண்களுக்கு வழங்கப்படுகிறது

நிதி உதவி பெறுவதற்கான விதிமுறைகள்

கர்ப்பமுற்ற பெண்கள் 12 வாரத்திற்கு கிராம சுகாதார செவிலியருடன் பதிவு செய்து கிட்னி எந்த தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த எண் பெற்றவுடன் 2000 ரூபாய் வங்கியில் வரவு வைக்கப்படும் இதனை அடுத்து ஊட்டச்சத்து பரிசு பெட்டகமும் மூன்றாம் மாதம் நிலையும் 2000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இரண்டாவது தவணையாக நான்காம் மாதம் நிறைவடைவதற்கும் கர்ப்ப காலம் மற்றும் ரத்த பரிசோதனை அரசு மருத்துவமனையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்தால் அப்போதும் 2000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போதும் இரண்டாம் கட்ட ஊட்டச்சத்து பரிசு பெட்டகம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவதாக அரசு மருத்துவமனைகளில் பிரசவம் நிகழ்ந்த உடன் நான்காயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும், நான்காவது் தவணையாக குழந்தைகளுக்கு மூன்றாம் தவணை தடுப்பூசி போட்ட பிறகு 4000 ரூபாய்  வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஐந்தாவது  குழந்தைகளுக்கு 9 மாதம் அதாவது 270 நாட்கள் தடுப்பூசி போட்ட பிறகு 2000 ரூபாய் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மொத்தமாக 18 ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது மட்டும் இல்லாமல் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து மாவு, இரும்பு சத்து டானிக், பேரிச்சம்பழம், புரத சத்து பிஸ்கட், ஆவின் நெய், பூச்சி மாத்திரை, துண்டு ஆகியவைகளை கொண்ட 2 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பரிசு பெட்டகம் வழங்கப்படும். 

Scheme Details : Click Now

திட்டத்தின் பயன்பெறுவதற்கான தகுதிகள்:

கர்ப்பிணித் தாய்மார்கள் 19 வயதை பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். இந்த உதவித்தொகையானது இரண்டு பிரசவத்திற்கு மட்டுமே பெற முடியும்.

இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெரும் தாய்மார்கள் முதல் மற்றும் ஐந்தாம் தவணை நிதியை மட்டும் பெற்றுக் கொள்ளலாம்.

திட்டத்தின் பயன்பெறுவதற்கான நடைமுறைகள்:

கர்ப்பிணித் தாய்மார்கள் கர்ப்பம் அடைந்தவுடன் 12 வாரத்திற்கு கிராமம் மற்றும் நகர சுகாதார செவிலியர் இடம் பதிவு செய்து எண் பெற்றிருக்க வேண்டும் அல்லது 12  வாரத்துக்குள் முன்பதிவு செய்து இருக்க வேண்டும். ஏழை கர்ப்பிணி தாய்மார்களுக்கு மட்டுமே இந்த திட்டமானது செயல்படுத்தப்படும் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

Leave a Comment