Free Gas Cylinder Scheme
இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் திட்டம் ஆரம்பம்
Free Gas Cylinder Scheme : இலவச சமையல் எரிவாயு வழங்கும் திட்டம் நேற்று ஆந்திர மாநிலத்தில் துவக்கப்பட்டுள்ளது இதனை அம் மாநில முதல்வர் திரு சந்திரபாபு நாயுடு அவர்கள் துவக்கி வைத்துள்ளார்.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
இந்த இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டத்திற்கு தீபம் 2 என்ற திட்டத்தை நம் மாநில அரசு வழங்கி உள்ளது.
சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலின் போது அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை தெலுங்கு தேசம் கட்சி ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது அந்த வகையில் ஆண்டுக்கு மூன்று இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் திட்டத்திற்கு தீபம் 2 என்று பெயரை ஆந்திரா அரசு நேற்று அறிவித்து இத்திட்டத்தை துவங்கி உள்ளது இத்திட்டத்தை துவங்கும் முதல்வர் சந்திரபாபு நாயுடு பயனாளி ஒருவர் வீட்டில் இத்திட்டத்தை துவங்கி வைத்து அவர் வீட்டில் தேநீர் தயாரித்து அனைவருக்கும் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்திட்டத்துக்காக மாநில அரசு 2684 கோடி ரூபாய் செலவாகும் என எதிர்பார்க்கிறது.
உஜ்வாலா
மத்திய அரசு இலவச சமையல் சிலிண்டர் மற்றும் அடுப்பு இலவசமாக நாடு முழுவதும் உள்ள வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பெண்களுக்கு இலவசமாக சமையல் எரிவாயு சிலிண்டரை உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது மேலும் அத்திட்டத்திற்கு தற்போது ஒவ்வொரு சிலிண்டருக்கும் ரூபாய் 300 ரூபாய் மானியம் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.