Which is the Best Plan of Jio, Airtel, BSNL which offers 2GB data daily at cheapest price?
ஜியோ, ஏர்டெல், பிஎஸ்என்எல் நிறுவனங்களின் தினமும் 2 ஜிபி டேட்டா குறைந்த விலையில் வழங்கும் சிறந்த திட்டம் எது?
இந்தியாவைப் பொறுத்தவரை ஜியோ ஏர்டெல் பிஎஸ்என்எல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகின்றது அதிலும் தற்போது பிஎஸ்என்எல் நிறுவனமானது குறைந்த விலையில் அதிக பயனுள்ள திட்டங்களை வழங்கி வருகிறது.Which is the Best Plan of Jio, Airtel, BSNL which offers 2GB data daily at cheapest price?
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
இருந்த போதிலும் பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் போதுமான டவர் வசதி இல்லை எனவே சிக்னல் பிராப்ளம் அதிகம் உள்ளது. அதேபோல பிஎஸ்என்எல் நிறுவனம் நாடு முழுவதும் முழுமையாக இன்னும் 4ஜி சேவையை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் தற்போது பிஎஸ்என்எல் நிறுவனமானது 4ஜி சேவை வழங்கும் பணியை TATA நிறுவனத்துடன் இணைந்து தற்போது விரைவில் நாடு முழுவதும் 4ஜி சேவை அளிக்கும் வேலையை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது தினசரி இரண்டு ஜிபி டேட்டாவுடன் குறைந்த விலையில் எந்த பிரிபெய்டு நிறுவனமானது குறைந்த விலையில் சேவையை வழங்குகிறது என்பதை விளக்கமாக தற்போது பார்க்கலாம்.
ஜியோ ₹349
ஜியோ நிறுவனம் ஆனது ₹349 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி இரண்டு ஜிபி டேட்டாவை வழங்கி வருகிறது இதில் 100 SMS குறுஞ்செய்தி எஸ்எம்எஸ் வழங்கும் மேலும் எந்த ஒரு ப்ரீபெய்ட் அல்லது போஸ்ட்பெய்டு உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள போன்களுக்கு அன்லிமிடெட் லோக்கல் கால் சேவையை வழங்கி வருகிறது.
அதே போல இதில் ரோமிங் வாய்ஸ் கால் சேவையும் அளித்து வருகிறது இந்த திட்டமானது 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது எனவே தினசரி 2 ஜிபி என்று 28 நாட்களுக்கு 56 ஜிபி டேட்டாவை ஜியோ நிறுவனம் ஆனது அளித்து வருகிறது.
அதேபோல ஜியோவின் இந்த ரீசார்ஜ் திட்டத்தின் மூலம் ஜியோ டிவி ஜியோ சினிமா ஜியோ கிளவுட்ஸ் ஆகிய திட்டங்களும் பயன்படுத்திக் கொள்ள முடியும் குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி இரண்டு ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணையவேகம் 64 கே பி பி எஸ் ஆக குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏர்டெல் ₹349
பாரதி ஏர்டெல் நிறுவனமானது ரூபாய் ₹349 ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் தினசரி ஒன்று புள்ளி ஐந்து ஜிபி டேட்டாவை வழங்குகிறது இந்த டேட்டாவும் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாக கொடுக்கப்பட்டுள்ளது.
ஏர்டெல் நிறுவனத்தில் ₹349 ரூபாய் ரீசார்ஜ் செய்தவுடன் தினசரி 1.5 ஜிபி டேட்டாவுடன் அன்லிமிடெட் லோக்கல் கால் சலுகையை வழங்குகிறது மேலும் எஸ்டிடி ரோமிங் கால் எந்த நெட்வொர்க்காக இருந்தாலும் சிறப்பு சலுகையாக அளித்து வருகிறது.
அதன்படி ஏர்டெல் நிறுவனம் தினசரி 1.5gb டேட்டா விகிதம் 28 நாட்களுக்கு 42 ஜிபி டேட்டாவை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. விண் மியூசிக், ப்ரீ அலோ டோன், அப்போலோ சர்கிள் உள்ளிட்ட பல நன்மைகள் இதில் கூடுதலாக கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
பிஎஸ்என்எல் ₹347
பிஎஸ்என்எல் நிறுவனம் ஆனது ரூபாய் ₹347 ரீசார்ஜ் திட்டத்தில் அதாவது மற்ற இரண்டு நிறுவனங்களில் விட 2 ரூபாய் குறைவாக உள்ள ரீசார்ஜ் திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா ஆனது அளிக்கப்படுகிறது.
அந்த டேட்டா நிறைவடைந்த உடன் 40 கே பி எஸ் ஸ்பீடில் இணையதள சேவையானது வழங்குகிறது மேலும் அன்லிமிடெட் லோக்கல் கால் வசதியை அளிக்கிறது இந்த திட்டமானது 54 நாட்கள் வேலிடியுடன் அளிக்கப்படுகிறது இதில் 100 குறுஞ்செய்தி எஸ்எம்எஸ் அனுப்பும் வசதியும் உள்ளது.
இதில் பிஎஸ்என்எல் டியூன், என்டர்டைன்மென்ட் கேம்ஸ், உள்ளிட்ட பல புதிய சலுகைகளையும் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்வதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியும் தினசரி 2 ஜிபி டேட்டா வீதம் 54 நாட்களுக்கு 108 ஜிபி டேட்டாவை பிஎஸ்என்எல் நிறுவனமானது மொத்தமாக வழங்குகிறது.
இந்த திட்டத்தில் ரோமின் கால் சலுகைகள் உள்ளது, மொபைல் கேமிங் சேவை, ஜிங்க் மியூசிக், பிஎஸ்என்எல் டியூன், வாவ் என்டர்டைன்மென்ட் உள்ளிட்ட பல சலுகைகளை பிஎஸ்என்எல் நிறுவனமானது வழங்குகிறது.
பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் ஒப்பிடும்போது ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் ஆனது ரூபாய் ₹349 ப்ரீபெய்டு திட்டத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்தை விட குறைவான டேட்டா மற்றும் வேலிடியை வழங்குகிறது.
ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் ₹347 பிரிபெய்ட் திட்டத்தில் அதிக டேட்டா மற்றும் வேலை சிட்டி வழங்கி வருகிறது எனவே இந்த மூன்று நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது பிஎஸ்என்எல் நிறுவனமானது குறைந்த செலவில் அதிக சேவைகளை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.