இன்றைய ராசிபலன் 07.05.2025 Today Rasi Palan

Today Rasi Palan 07.05.2025

Today Rasi Palan இன்றைய ராசிபலன் சித்திரை: 24  புதன் – கிழமை 07.05.2025  ராசி பலன்கள்

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

இன்றைய ராசி மற்றும் நட்சத்திர பலன்கள்

இன்றைய ராசிபலன்
இன்றைய ராசிபலன்

🔯 மேஷம் -ராசி: 🐐
குழந்தைகளைப் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். உயர்கல்வியில் தெளிவு ஏற்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றமான அனுபவம் கிடைக்கும். உத்தியோகத்தில் பொறுமை வேண்டும். புதுவிதமான கனவுகள் பிறக்கும். கலைத்துறைகளில் ஆர்வம் ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.

⭐அஸ்வினி : தெளிவு ஏற்படும்.
⭐பரணி : அனுபவம் கிடைக்கும்.
⭐கிருத்திகை : ஆர்வம் ஏற்படும்.

♉ ரிஷபம் – ராசி: 🐂
பிரபலமானவர்களின் சந்திப்பு ஏற்படும். புதிய வேலைக்கான முயற்சிகள் கைகூடும். கடன் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபாரம் சார்ந்த பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்த சில பொறுப்புகள் கிடைக்கும். கல்வியில் புரிதல் உண்டாகும். நிம்மதி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் நிறம்.

⭐கிருத்திகை : சந்திப்பு ஏற்படும்.
⭐ரோகிணி : பயணங்கள் கைகூடும்.
⭐மிருகசீரிஷம் : புரிதல்கள் உண்டாகும்.

♊ மிதுனம்- ராசி: 🤼‍♀‍
பூர்வீக சொத்துக்களில் சில மாற்றங்களை செய்வீர்கள். உயர் அதிகாரிகளைப் பற்றிய புரிதல் மேம்படும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். கணிதம் தொடர்பான துறைகளில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். தகவல் தொடர்பு துறையில் முன்னேற்றம் உண்டாகும். சிறுதூரப் பயணங்களால் புதிய அனுபவங்கள் ஏற்படும். அருகில் இருப்பவர்களிடம் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும். கவலை மறையும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்.

⭐மிருகசீரிஷம் : புரிதல் மேம்படும்.
⭐திருவாதிரை : ஆர்வம் ஏற்படும்.
⭐புனர்பூசம் : பிரச்சனைகள் குறையும்.

♋ கடகம் – ராசி: 🦀
நண்பர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் ஏற்படும். பழக்க, வழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். ஒப்பந்தங்களில் தாமதம் உண்டாகும். தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். தானிய பொருட்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்க்கவும். வேலையாட்கள் விஷயத்தில் பொறுமை வேண்டும். நட்பு மேம்படும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.

⭐புனர்பூசம் : அறிமுகம் ஏற்படும்.
⭐பூசம் : வாதங்களை தவிர்க்கவும்.
⭐ஆயில்யம் : பொறுமை வேண்டும்.

♌ சிம்மம் – ராசி: 🦁
அலுவலகத்தில் பொறுமையுடன் செயல்படவும். அலைபாயும் சிந்தனைகளால் குழப்பங்கள் ஏற்படும். பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். கலைத்துறையில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் ஏற்படும். நெருக்கமானவர்களின் இடத்தில் மனம் விட்டு பேசுவது புரிதலை உண்டாக்கும். சமூகம் சார்ந்த பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். எதிலும் திருப்தியற்ற மனநிலை உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்.

⭐மகம் : பொறுமையுடன் செயல்படவும்.
⭐பூரம் : முன்னேற்றமான நாள்.
⭐உத்திரம் :  மாற்றங்கள் ஏற்படும்.

♍ கன்னி – ராசி: 👩
விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். குழந்தைகளின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள். உடலில் ஒருவிதமான அசதிகள் ஏற்பட்டு நீங்கும். நெருக்கடியான சில பிரச்சனைகள் தீர ஆலோசனை கிடைக்கும். வியாபாரப் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் விட்டுக்கொடுத்து செயல்படவும். எதிலும் விழிப்புணர்வுடன் இருக்கவும். உதவி கிடைக்கும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்.

⭐உத்திரம் : புரிதல் உண்டாகும்.
⭐அஸ்தம் : ஆலோசனை கிடைக்கும்.
⭐சித்திரை : விழிப்புணர்வு வேண்டும்.

இன்றைய ராசிபலன்
இன்றைய ராசிபலன்

♎ துலாம் – ராசி: ⚖
குடும்பத்தாரின் எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். உடன் இருப்பவர்களால் பொறுப்புக்கள் மேம்படும். நண்பர்களின் வருகை உண்டாகும். வியாபாரம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். உத்தியோகத்தில் மதிப்பு உயரும். வரவுகளால் சேமிப்புகள் அதிகரிக்கும். சமூகம் சார்ந்த பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். கலைத்துறையில் மேன்மை அடைவீர்கள். வரவு மேம்படும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் :  1
💠அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்.

⭐சித்திரை : பொறுப்புக்கள் மேம்படும்.
⭐சுவாதி : மதிப்பு உயரும்.
⭐விசாகம் : மேன்மையான நாள்.

♏ விருச்சிகம் – ராசி: 🦂
முடிவுகளில் அனுபவம் வெளிப்படும். குழந்தைகள் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். புனித ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். வேலை ஆட்களின் இடத்தில் அனுசரித்து செல்லவும். அலுவலகத்தில் மதிப்பு உயரும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். ஆசிரியர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். செலவு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : அடர்நீல நிறம்.

⭐விசாகம் : அனுபவம் வெளிப்படும்.
⭐அனுஷம் : அனுசரித்து செல்லவும்.
⭐கேட்டை : மாற்றமான நாள்.

♐ தனுசு – ராசி:  🏹
கணவன், மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக தடைப்பட்டு வந்த பணிகள் முடியும். உறவினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். புண்ணிய ஸ்தல பயணங்கள் கைகூடும். வியாபாரத்தில் சில மாற்றமான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் திருப்தி ஏற்படும். மனதளவில் உற்சாகம் பிறக்கும். அனுபவம் கிடைக்கும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.

⭐மூலம் : புரிதல் அதிகரிக்கும்.
⭐பூராடம் : பயணங்கள் கைகூடும்.
⭐உத்திராடம் : உற்சாகமான நாள்.

♑ மகரம் – ராசி: 🦌
மாற்றமான சிந்தனைகளால் புதுமை ஏற்படும். குழப்பமான கனவுகளால் மன அமைதி குறையும். மற்றவர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும். எதிலும் திருப்தியின்மையான சூழல் உண்டாகும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். தற்பெருமையான பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. விவேகம் வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.

⭐உத்திராடம் : புதுமையான நாள்.
⭐திருவோணம் : அலைச்சல்கள் ஏற்படும்.
⭐அவிட்டம் : பேச்சுக்களில் கவனம் வேண்டும்.

♒  கும்பம் – ராசி: 🍯
உடன்பிறந்தவர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். பழகும் விதத்தில் சில மாற்றங்கள் உண்டாகும். பலம் மற்றும் பலவினைகளை புரிந்து கொள்வீர்கள். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். பணிபுரியும் இடத்தில் சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். துணைவரின் இடத்தில் அனுசரித்து செல்லவும். விலகி சென்றவர்களைப் பற்றிய நினைவுகள் தோன்றி மறையும். சாதனை வெளிப்படும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம்.

⭐அவிட்டம் : ஒத்துழைப்பு ஏற்படும்.
⭐சதயம் : பிரச்சனைகள் குறையும்.
⭐பூரட்டாதி : அனுசரித்து செல்லவும்.

♓ மீனம் – ராசி:  🐟
உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பு உயரும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். தடைப்பட்ட ஒப்பந்தங்கள் சாதகமாகும். பணிபுரியும் இடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். கால்நடைகளின் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். சவாலான பணிகளை செய்து முடிப்பீர்கள். உயர்வு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள் நிறம்.

⭐பூரட்டாதி : மதிப்பு உயரும்.
⭐உத்திரட்டாதி : பொறுப்புகள் கிடைக்கும்.
⭐ரேவதி : ஈர்ப்பு அதிகரிக்கும்.

Daily Jobs Click

Home

Leave a Comment