TNPSC Group 2 2A Exam Results will Release on December 2024
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு முடிவு வெளியாகும் தேதி? முதல் நிலை தேர்வு எப்போது?
TNPSC Group 2 2A Results 2024
TNPSC Group 2 2A Exam Results will Release on December 2024 : டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவு வெளியாகும் தேதி டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு முதல் நிலை தேர்வு எப்போது முக்கிய தகவல்… டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 முதல்நிலைத் தேர்வுக்கான முடிவுகள் வருகின்ற டிசம்பர் மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தேர்வாணையம் அறிவித்துள்ளது.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
TNPSC தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள இரண்டாம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வை (செப்டம்பர் 14) நடத்தியது. இந்தத் தேர்வு மூலம் மொத்தம் 2327 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் நேர்முகத் தேர்வு அடங்கிய 507 பணியிடங்களும், நேர்முகத் தேர்வு அல்லாத 1820 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.
TNPSC குரூப் 2 முதல்நிலைத் தேர்வுக்கு 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்த நிலையில், 5.81 லட்சம் தேர்வர்கள் தேர்வு எழுதியுள்ளனர். அதாவது வருகை சதவிகிதம் 73.22% ஆக உள்ளது.
இந்தக் TNPSC குரூப் 2 முதல்நிலைத் தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெற்றது. முதல் பகுதியில் பொது அறிவில் 75 கேள்விகளும், திறனறி பகுதியில் 25 கேள்விகளும் இடம்பெற்றன. இரண்டாம் பகுதி மொழிப் பாடப்பகுதி. இதில் தமிழ் அல்லது ஆங்கில பாடத்தில் இருந்து 100 கேள்விகள் இடம்பெற்றன.
இந்த TNPSC குரூப் 2 தேர்வுக்கான உத்தேச விடைக்குறிப்பு செப்டம்பர் 23 ஆம் தேதி தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டது.
TNPSC Group 2 2A Exam Result Date 2024
இந்தநிலையில், TNPSC குரூப் 2 முதல்நிலைத் தேர்வுக்கான முடிவுகள் வருகின்ற டிசம்பர் மாதத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்வாணையம் அறிவித்துள்ளது.
TNPSC Group 2 Mains Exam Date 2025
TNPSC Group 2 முதன்மைத் தேர்வுகள் 2025 பிப்ரவரி மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றும் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள் விரைவாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதால் தேர்வர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.