33,000 காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு மின் வாரியம் மற்றும் மின்பகிர்மான கழகத்தில் அமைச்சர் கிரீன் சிக்னல்!!
TNEB 33000 Vacancies details
TNEB 33000 Vacancies details : தமிழ்நாடு மின்வாரியம் மற்றும் மின் பகிர்மான கழகத்தில் உள்ள 33,000 காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் திரு செந்தில் பாலாஜி அவர்கள் அறிவிப்பு வெளியிட ஆவணம் செய்வாரா? என மின்வாரிய பணியாளர்கள் ஏங்கி வருகின்றனர் மேலும் ஊதிய உயர்வு உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் அமைச்சர் அறிவிக்க வேண்டும் என்றும் மின்வாரிய பணியாளர்கள் காத்துக் கொண்டுள்ளனர்.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
மின்வாரியத்தில் இந்த காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கு அமைச்சர் கிரீன் சிக்னல் கொடுத்தால் மின்வாரிய பணியாளர்கள் மட்டுமின்றி மின்சாரத் துறையில் பணியாற்ற வேண்டும் என்று ஆர்வமாக உள்ள தமிழக இளைஞர்களும் இந்த மகிழ்ச்சி செய்திக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்களின் மத்திய அமைப்பு (COTEE), இது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மனு கொடுத்திருக்கின்றனர். அந்த மனுவில், மின்வாரியத்தில் கள உதவியாளர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 33 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன.
காலியிடங்கள் காரணமாக, ஊழியர்கள் பணிபுரியும் போது விபத்துக்களால் தங்கள் வாழ்க்கையை இழக்கின்றனர். சிலர் விபத்துகளால் உடல் இயலாமைக்கு தள்ளப்படுகிறார்கள். கடந்த 2 ஆண்டுகளில், 70-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இறந்துள்ளனர் மற்றும் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் காயமடைந்துள்ளனர், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சாரவாரிய ஊழியர்களின் பாதுகாப்பை மேம்படுத்த மின்சாரத்துறை அமைச்சகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், ஆகஸ்ட் 2007க்குப் பிறகு தற்காலிகப் பணியாளர்களுக்கு நிரந்தரப் பணி வழங்கப்படவில்லை. 35 வயதைத் தாண்டிய தற்காலிகப் பணியாளர்கள் கேங்மேன் பதவிக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை இருப்பதையும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதனால், மின்சார வாரியம் தற்காலிக பணியாளர்களை கண்டறிந்து அவர்களுக்கு நிரந்தர வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மின்சாரவாரிய ஊழியர்கள் அமைப்பு அந்த மனுவில் வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தைப் பொறுத்தவரை மிகப்பெரிய நிதி நெருக்கடியில் இருக்கிறது. இதில் இருந்து மீள அரசு இப்போது நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறது. அதனால் 33 ஆயிரம் காலிப் பணியிடங்களை ஒரே நேரத்தில் நிரப்பினால் இன்னும் கூடுதல் நிதி நெருக்கடிக்கு அரசு தள்ளப்படும். எனவே ஒருசில ஆயிரம் வேலை வாய்ப்புகளை மட்டுமே நிரப்ப மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்கும். ஏற்கனவே மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் செயல்படுத்தப்படுவதால் அரசு பெரும் நிதி நெருக்கடி சந்தித்துக் கொண்டிருக்கிறது. இந்த விஷயங்களை கருத்தில் கொண்டு அமைச்சர் செந்தில் பாலாஜி முடிவெடுப்பார் என தெரிகிறது.