Rental Agreement Stamp Paper Value Increase in Tamilnadu Sep 2024
நீங்கள் வாடகை வீட்டில் கூடியிருக்கிறீர்களா? உங்களுக்காக தமிழக அரசு புதிய அறிவிப்பு..
Rental Agreement Stamp Paper Value Increase in Tamilnadu Sep 2024 : வாடகை வீடு மற்றும் வாடகை கடை உள்ளிட்டவற்றில் நீங்கள் குடியிருக்கிறீர்கள் அல்லது வாடகை கடை வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் அவர்களுக்கு தமிழக அரசு புதிய உத்தரவை அறிவித்துள்ளது.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
பொதுவாக வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள், வாடகை குடியிருப்போர் மற்றும் வாடகை விடுவோர் ஆகிய இருவருக்குமான ஒப்பந்தத்தை முத்திரைத்தாளில் அதாவது ஸ்டாம்ப் பேப்பரில் கையெழுத்து இடப்பட்டு குடியிருக்க அனுமதிக்கப்படுவார்கள்.
அதேபோல வாடகை கடை எடுத்து தொழில் செய்பவர்களும் முத்திரைத்தாள் என்கின்ற ஸ்டாம்ப் பேப்பரில் இருவருக்குமான உடன்படிக்கையை எழுதி எத்தனை மாதங்கள், மாதம் எவ்வளவு வாடகை தொகை, உள்ளிட்ட முக்கிய குறிப்புகளை அந்த பத்திரத்தில் குறிப்பிட்டு இருவரும் ஒருமனதாக கையெழுத்து விட்டு வாடகைக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
அவ்வாறு வாடகைக்கு விடப்படும் போது செய்யப்படுகின்ற ஒப்பந்தமானது பெரும்பாலும் 20 ரூபாய் பத்திரங்களில் இந்த ஒப்பந்தம் தொடர்பான அறிவிப்பை எழுதி வாடகைக்கு விடுவார்கள்.
ஆனால் தற்போது தமிழக அரசு ஆனது வீடு, கடை வாடகை உள்ளிட்ட சாதாரண ஒப்பந்த ஆவணங்களுக்கு 200 ரூபாய் மதிப்புள்ள முத்திரைத்தாள் பயன்படுத்த பத்திர பதிவுத்துறை ஆனது அறிவித்துள்ளது.
எனவே வீடு வாடகைக்கு பலரும் பயன்படுத்தக்கூடிய 20 ரூபாய் பத்திரங்களை இனிமேல் பயன்படுத்தாமல் 200 ரூபாய் மதிப்புள்ள பத்திரத்தை பயன்படுத்த வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது குறைந்த மதிப்பிலான பத்திரங்கள் பயன்படுத்துவதை நிறுத்த தமிழக அரசானது முடிவு செய்துள்ளது.
ஒப்பந்தங்களை வாடகை விடும்போது பதிவு செய்யாமல் வைத்துக் கொள்வதாக இருந்தாலும் 200 ரூபாய் முத்திரைத்தாளையை பயன்படுத்துமாறும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.