BREAKING:மாணவர்களின் உதவி தொகை 2 மடங்காக உயர்வு!- முதல்வர் அதிரடி அறிவிப்பு! யாருக்கு தெரியுமா?.. Physically Challenged Students Scholarship Increased Tamilnadu Govt

மாணவர்களின் உதவி தொகை 2 மடங்காக உயர்வு!- முதல்வர் அதிரடி அறிவிப்பு! யாருக்கு தெரியுமா?..

Physically Challenged Students Scholarship Increased Tamilnadu Govt

Physically Challenged Students Scholarship Increased Tamilnadu Govt பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பயிலுகின்ற மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்களின் உதவித்தொகையை இரு மடங்காக உயர்த்தி முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டு உள்ளார்.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group  Join
 Whatsapp Channel Join
Physically Challenged Students Scholarship Increased Tamilnadu Govt
Physically Challenged Students Scholarship Increased Tamilnadu Govt

பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பயிலுகின்ற மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர் உதவித் தொகையை இரு மடங்காக உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் .இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பது என்னவென்றால் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பேருந்துகளில் கட்டணமில்லா பயணச் சலுகை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட உதவித்தொகை ரூபாய் 1000 என்பதை ரூபாய் 1500 ஆகவும் உயர்த்தி வழங்கினார்கள். அத்துடன் தற்போது பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ மாணவியருக்கு வழங்கப்படுகின்ற கல்வி உதவி தொகையையும் உயர்த்தி அவர்கள் ஆர்வத்துடன் கல்வி கற்க உதவி செய்துள்ளார்கள்.

அதாவது பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்களில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்க்கு வழங்கப்படும். கல்வி உதவித் தொகை ஆண்டுக்கு ரூ.1,000 என்பதை இரு மடங்காக உயர்த்தி ரூ. 2,000 என்றும்; 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ–மாணவியர்க்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை ஆண்டுக்கு ரூ.3,000 என்பதை இரு மடங்காக உயர்த்தி ரூ.6,000 என்றும்; 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ–மாணவியர்க்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை ஆண்டுக்கு ரூ.4,000 என்பதை இரு மடங்காக உயர்த்தி ரூ.8,000 என்றும் உயர்த்தி வழங்கிட ஆணையிட்டுள்ளார்கள்.

அதேபோல, கல்லூரிகளில் பட்டப் படிப்பு படிக்கும் மாற்றுத் திறனாளி மாணவ-மாணவியர்க்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் கல்வி உதவித் தொகை ரூ.6 ஆயிரம் என்பதை ரூ.12 ஆயிரம் என இருமடங்காக உயர்த்தி வழங்கிடவும் ஆணையிட்டுள்ளார்கள்.

மேலும் தொழில்கல்லூரிகளிலும் பட்டம் மேற்படிப்புகளிலும் படிக்கின்ற மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும். கல்வி உதவித் தொகை ரூபாய் 7000 என்பதை ரூபாய் 14,000 ஆக உயர்த்தி வழங்கிடவும் முதல்வர் அணையிட்டுள்ளார்.

இப்படி மாற்றுத்திறனாளிகள் உள்ளங்களில் தேங்கி கிடக்கும் ஏற்க உணர்வுகளை தீர்க்கும் வகையில் அவர்களுக்கு அனைத்து வகையிலும் உதவி வரும் முதல்வர் மு. க. ஸ்டாலின் மாற்றத்திறனாளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவிடும் வகையிலும் அவர்கள் அனைவரும் பயன் பெறும் வகையிலும் அவர்களுக்கு வழங்கப்படும்.

கல்வி உதவி ஊக்க தொகையை இரண்டு மடங்காக உயர்த்தி அதற்காக ரூபாய் 14 கோடியே 90,52,000 அனுமதித்து செப்டம்பர் 10ஆம் தேதி ஆணை பிறப்பித்துள்ளார்கள். பள்ளி கல்லூரி படிப்புகளுடன் மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்கள் படிப்பை நிறுத்தி விடக்கூடாது என்பதற்காகவும் அவர்கள் ஆராய்ச்சி படிப்புகளிலும் ஈடுபட வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆராய்ச்சி படிப்பில் சேரும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவியருக்கு ஊக்கம் அளிப்பதற்காக முதல்வரின் ஆராய்ச்சி உதவி தொகை திட்டத்தின் கீழ் தலா ரூபாய் ஒரு லட்சம் வீதம் 50 மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் ரூபாய் 50 லட்சம் ஒதுக்கீடு செய்தும் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் ஆணையிட்டுள்ளார்.

முதல்வர் பிறப்பித்துள்ள இந்த ஆணைகளின் பயனாக தமிழ்நாட்டில் உள்ள மாற்றத்தினால் மாணவ மாணவியர் வாழ்வில் ஊக்கம் பெறும், ஆக்கம் சேரும், உற்சாகம் பொங்கும், அறவழி பரவும் அவர்கள் வாழ்த்து சிறக்கும் என்பது உறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

error: Content is protected !!