Kirivalam sella ugantha naram in tamil
திருவண்ணாமலை கிரிவலம் செல்ல உகந்த நேரம்
kirivalam sella ugantha naram in tamil உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை கிரிவலம் செல்ல உகந்த நேரம் நவம்பர் மாதம் 15 ஆம் தேதி பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை திரு அண்ணாமலை கோவில் நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
திருவண்ணாமலை கிரிவலம் செல்ல உகந்த நேரம் நவம்பர் 15ம் தேதி
இந்த மாதம் வருகின்ற இந்த பௌர்ணமி அன்னாபிஷேகம் நடைபெறுவதால் மிகவும் பிரசித்தி பெற்ற பௌர்ணமியாக கருதப்படுகின்றது ஐப்பசி மாதம் வருகின்ற இந்த பௌர்ணமி நவம்பர் மாதம் 15 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 5 40 மணிக்கு கிரிவலம் செல்ல உகந்த நேரம் தொடங்குவதாக திரு அண்ணாமலை கோவில் நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கிரிவலம் ஆனது நவம்பர் 16ஆம் தேதி சனிக்கிழமை அதிகாலை 33 மணிக்கு நிறைவு செய்யப்படுவதாக திருவண்ணாமலை கோவில் நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த குறிப்பிட்ட நேரத்தில் கிரிவலம் செல்லும் பக்தர்கள் மிகுந்த பலன்களை பெறுவார்கள் என்பது ஐதீகம்.
திருவண்ணாமலை கோவிலில் உள்ள மூலவர் சன்னதியை வணங்குவதற்கு இன்று மாலை 3 மணி முதல் 6 மணி வரை தடை செய்யப்பட்டுள்ளது காரணம் திருவண்ணாமலை அண்ணாமலையாருக்கு இன்று அண்ணா அபிஷேகம் நடைபெறுவதும் இதன் காரணமாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இன்றைய ஐப்பசி மாதம் அன்னாபிஷேக கிரிவலம் ஆனது திருவண்ணாமலை மிகவும் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீப கிரிவலம் மற்றும் சித்ரா பவுர்ணமி கிரிவலம் போன்ற சிறப்பை இந்த ஐப்பசி மாத பௌர்ணமி கிரிவலம் பெற்றுள்ளதாக ஆன்மீக அடியார்கள் தெரிவிப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படுகிறது.
எனவே கிரிவலம் செல்ல விரும்பும் பக்தர்கள் 2668 அடி உயர அண்ணாமலை யாரை வணங்கி 14 கிலோமீட்டர் தொலைவு கிரிவலம் செல்ல நினைப்பவர்கள் இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம் மேலும் கிரிவலம் செல்வதற்காக தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றது மாவட்ட நிர்வாகம் சார்பாக பல்வேறு முன் எச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது காவல்துறையினர் சார்பாகவும் பாதுகாப்பு பணியில் காவலர்கள் பணியமத்தப்பட்டுள்ளார்கள் என்பது முக்கிய தகவலாகும்.