Vinayaga Chadhurthi 2025
விநாயகர் சதுர்த்தி 2025: விநாயகர் சிலையை எத்தனை நாட்கள் வீட்டில் வைத்து வழிபடலாம்?
Vinayaga Chadhurthi 2025: விநாயகப் பெருமானின் அவதார தினமான விநாயகர் சதுர்த்தியை நாம் ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக கொண்டாடுகிறோம். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா ஆகஸ்ட் 27, 2025 புதன்கிழமை அன்று கொண்டாடப்பட உள்ளது. சதுர்த்தி அன்று களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை வீட்டில் வைத்து, கொலுக்கட்டை, மோதகம், லட்டு, சுண்டல், அவல், பொரி, அருகம்புல், எருக்கம்பூ போன்றவற்றை படைத்து வழிபடுவது வழக்கம்.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |

விநாயகர் சிலையை எத்தனை நாட்கள் வீட்டில் வைத்து வழிபடலாம்?
விநாயகர் சதுர்த்தி அன்று சிலை வாங்குபவர்கள் எத்தனை நாட்கள் அதை வீட்டில் வைத்து வழிபடலாம் என்பது பலரின் மனதில் எழும் கேள்வி. இதற்கு எந்தவிதமான குறிப்பிட்ட விதிகளும் இல்லை. அவரவர் வசதி மற்றும் நம்பிக்கைக்கு ஏற்ப குறைந்தபட்சம் 1.5 நாட்கள் முதல் அதிகபட்சம் 11 நாட்கள் வரை விநாயகர் சிலையை வீட்டில் வைத்து வழிபடலாம். ஒவ்வொரு நாட்களுக்கும் ஒரு சிறப்புப் பலன் உண்டு.
நாட்களும் அதன் பலன்களும்:
1.5 நாட்கள்: இது மிகவும் பொதுவான மற்றும் சுருக்கமான வழிபாட்டு முறையாகும். சதுர்த்தி அன்று விநாயகரை வீட்டில் வைத்து வழிபட்டு, மறுநாள் பஞ்சமி அன்று விநாயகர் சிலையை நீரில் கரைப்பார்கள். இது இன்றைய அவசர காலத்தில், இதயபூர்வமாக வழிபட்டு பிரியாவிடை கொடுப்பதைக் குறிக்கிறது.
3 நாட்கள்: 3 நாட்கள் விநாயகரை வீட்டில் வைத்து வழிபடுவது மங்களத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. 10 நாட்கள் வைக்க முடியாதவர்கள், இந்த முறையில் விநாயகருக்கு விதவிதமான நைவேத்தியங்கள் படைத்து, பிரார்த்தனை செய்து வழிபடுவார்கள்.
5 நாட்கள்: 5 நாட்கள் விநாயகர் சிலையை வீட்டில் வைத்து வழிபடுவது நேர்மறை ஆற்றல் மற்றும் செல்வ செழிப்பைக் கொண்டு வரும் என நம்பப்படுகிறது. பாரம்பரிய முறைப்படி கொண்டாடுபவர்கள் இந்த நாட்களில் தினசரி பூஜைகள் மற்றும் சடங்குகளைச் செய்து வழிபடுவார்கள். இது நிதானமாக வழிபட ஏற்ற முறையாகும்.
7 நாட்கள்: 7 நாட்கள் விநாயகரை வீட்டில் வைத்து வழிபட்டால், விநாயகர் நம் வீட்டில் தங்குவதாக நம்பிக்கை. இந்த ஒரு வாரம் முழுவதும் குடும்பத்தினர் ஒன்று கூடி, பக்தி சிரத்தையுடன் வழிபடுவார்கள். இது ஆனந்தம், உற்சாகம், மற்றும் கொண்டாட்டத்தை அனுபவிக்க விரும்புபவர்களுக்கு உகந்த முறையாகும்.
11 நாட்கள்: மகாராஷ்டிரா போன்ற வட மாநிலங்களில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்படும் முறை இது. ஆழமான ஆன்மிக பயணத்தை விரும்புபவர்கள் 11 நாட்கள் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவார்கள். இந்த 11 நாட்களும் வீடு முழுவதும் விழாக்கோலம் பூண்டிருக்கும். பந்தல் அமைத்து வழிபடுபவர்களும் இந்த முறையையே பின்பற்றுவார்கள்.
சரியான முறை எது?
விநாயகர் சிலையை எத்தனை நாட்கள் வீட்டில் வைத்து வழிபடுவது என்பது அவரவரின் தனிப்பட்ட நம்பிக்கை மற்றும் வசதியைப் பொறுத்தது. இதில் எது சரி, எது தவறு என எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை. விநாயகரை வீட்டில் வைத்து வழிபடுவது அன்பு, பக்தி மற்றும் நேர்மறை ஆற்றலை ஈர்ப்பதற்கான ஒரு வழியாகும். அவரவர் பாரம்பரிய வழக்கத்தின் அடிப்படையில் இந்த வழிபாடு முறை கடைப்பிடிக்கப்படுகிறது.