டிஎன்பிஎஸ்சி குரூப் 4 சான்றிதழ் சரிபார்ப்பு தேர்வர்கள் பட்டியல் வெளியீடு! TNPSC Group 4 2024 Certificate Verification List

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 சான்றிதழ் சரிபார்ப்பு தேர்வர்கள் பட்டியல் வெளியீடு!

TNPSC Group 4 2024 Certificate Verification List

TNPSC Group 4 2024 Certificate Verification List :குரூப் 4 சான்றிதழ் சரிபார்ப்பு – டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு. குரூப் 4 தேர்வு முடிவின் படி தற்காலிகமாக தேர்வானவர்களின் பட்டியலை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

சான்றிதழ் சரிபார்ப்பிற்காக தற்காலிகமாக தேர்வானவர்களின் பட்டியல் வெளியீடு.

நவம்பர் 9 முதல் 21-ஆம் தேதிக்குள் இணையதளத்தில் சான்றிதழை பதிவேற்றம் செய்ய டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தல்.

தேர்வு முடிவு வெளியான 6 நாட்களில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது – டிஎன்பிஎஸ்சி.

 

ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு- IV ( தொகுதி- IV பணிகள் ) ன் தேர்வு முடிவுகள் , தேர்வர்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசை விவரங்கள் 28.10.2024 அன்று தேர்வாணைய வெளியிடப்பட்டன.

கணினி வழித்திரை சான்றிதழ் சரிபார்ப்பிற்கு ( Onscreen Certificate Verification ) மதிப்பெண்கள் , ஒட்டுமொத்த தரவரிசை எண் , இட ஒதுக்கீட்டு விதி , காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அடிப்படையில் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் 07.11.2024 அன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட ( 6 ) ஆறு வேலை நாட்களில் இப்பட்டியல் தேர்வாணையத்தால் விரைவாக வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

கணினி வழித்திரை சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்கள் தங்களது சான்றிதழ்களை 09.11.2024 முதல் 21.11.2024 வரை தேர்வாணைய இணைய தளத்தின் ஒரு முறைப் பதிவு பிரிவின் ( One Time Registration Platform ) மூலம் பதிவேற்றம் செய்யலாம் .

 

Leave a Comment