TN Village Assistant Recruitment 2024 – 2299 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்கள் நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவு Don’t Miss

TN Village Assistant Recruitment 2024

2299 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்கள் நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவு

TN Village Assistant Recruitment 2024 : 2299 கிராம உதவியாளர் சிறப்பு காலமுறை ஊதியத்தில் விஏஓ அலுவலக கிராம உதவியாளர் பணி வாய்ப்பு காலி பணியிடங்கள் நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவு.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group  Join
 Whatsapp Channel Join

தமிழ்நாடு அரசு 2299  கிராம உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் வர் உத்தரவிட்டது.

தகுதி என்ன காலி பணியிடங்கள் எந்தெந்த மாவட்டங்களில் எவ்வளவு காலி பணியிடங்கள் உள்ளது விவரங்களை கீழே காணலாம்.

tn village assistant recruitment 2024
tn village assistant recruitment 2024

கிராம உதவியாளர் பணி என்றால் என்ன?

தமிழ்நாட்டின் வருவாய்க் கிராமங்களின் அதிகாரியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கீழாக கிராம உதவியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

வரி வசூலித்தல், கிராம கணக்குகளை நிர்வகித்தல், நில வருவாய் ஆவணங்களைத் தயாரித்தல், கணக்குகளை முறையாக சரியாக வைத்து கொள்ளுதல், பிறப்பு, இறப்பு போன்ற பல்வேறு பதிவேடுகளை தயாரித்தல் மற்றும் புதுப்பித்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

நிறுவனத்தின் பெயர் : தமிழ்நாடு அரசு வருவாய் துறை

வேலைவாய்ப்புகள் :தமிழ்நாடு அரசு வேலை

கிராம உதவியாளர் பதவிக்கான அடிப்படைத் தகுதிகள் என்ன?

குறைந்தபட்சம் 5ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

அறிவிக்கப்பட்ட பதவிக்கான வட்ட எல்லைக்குள் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்

வண்டி ஓட்டும் திறன் இருக்க வேண்டும்

இருதாரமணம் இருக்கக் கூடாது

கிராம உதவியாளர் சம்பளம் என்ன? 

மாதம் ரூ.11,100 முதல் 35,100 வரை

கிராம உதவியாளர் பதவி உயர்வு :

10 ஆண்டுகளுக்கு பின்பு கிராம நிர்வாக அதிகாரியாக பதவி உயர்வு வழங்கப்படும்.

கிராம உதவியாளர் வயதுவரம்பு என்ன? 

ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் அருந்ததியினர் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், அதிகபட்சமாக 37 வயது வரையும் இருத்தல் வேண்டும். பொதுப்பிரிவினர் அதிகபட்சமாக 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.

ரேஷன் கடை ஊழியர் பணிக்கு நேர்முக தேர்வு தேதி அறிவிப்பு

கிராம உதவியாளர் தேர்வு செய்யும் முறை

கிராம உதவியாளர்கள் பணிக்கான தேர்வு செய்யும் முறையானது, திறனறிதல் தேர்வு, நேர்முகத் தேர்வு, சாண்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.

திறனறிதல் தேர்வுவாசித்தல், எழுதுதல் என இரண்டு நிலையில் இருக்கும். எந்த ஒரு புத்தகத்திலும் இருந்து ஏதாவது ஒரு பக்கத்தில் உள்ள வாசகங்களை விண்ணப்பதாரரை வாசிக்கச் சொல்லலாம். இதற்கு 10 மதிப்பெண் வழங்கப்படும். ஏதேனும் தலைப்பு பற்றி 100 வார்த்தைக்கு மிகாமல் கட்டுரை எழுத செய்யலாம். இதற்கு 30 மதிப்பெண் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், விவரங்களுக்கு தமிழக அரசின் https://www.tn.gov.in , வருவாய் நிருவாகத் துறையின் இணையதளம் (https://cra.tn.gov.in) மற்றும் அந்தந்த மாவட்ட அதிகாரப்பூர்வமான இணையதளத்தை அவ்வப்போது பார்வையிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

tn village assistant recruitment 2024
tn village assistant recruitment 2024

கிராம உதவியாளர் காலியிடங்கள் விவரங்கள்:

அரியலூர் – 21, சென்னை 20, செங்கல்பட்டு-41, கோயம்புத்தூர்-61, கடலூர் – 66, திண்டுக்கல் – 29, தருமபுரி – 39, ஈரோடு – 141, காஞ்சிபுரம் – 109, கரூர் – 27, கிருஷ்ணகிரி -33, மதுரை – 155, மயிலாடுதுறை – 13, நாகப்பட்டினம் – 68, நாமக்கல் – 68,பெரம்பலூர் – 21, புதுக்கோட்டை – 27, ராமநாதபுரம் – 29, ராணிபேட்டை 43, சேலம் – 105,சிவகங்கை – 46, தஞ்சாவூர் – 305, தேனி-25, திருவண்ணாமலை – 103, திருநெல்வேலி – 45, திருப்பூர் – 102, திருவாரூர் – 139, திருவள்ளூர் – 151, திருச்சி – 104. தூத்துக்குடி – 77, தென்காசி – 18, திருப்பத்தூர் -32, விருதுநகர் – 38, வேலூர் – 30, விழுப்புரம் – 31

ரேஷன் கடை ஊழியர் பணிக்கு நேர்முக தேர்வு தேதி அறிவிப்பு

Tamil nadu Government Today News

 

Leave a Comment

error: Content is protected !!