தமிழக பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை எத்தனை நாட்கள்?- வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை மாணவர்கள் உற்சாகம்!..
TN Quarterly Leave 2024 Announcement Pallikalvithurai
TN Quarterly Leave 2024 Announcement Pallikalvithurai பள்ளிக்கல்வித்துறை ஆனது ஒவ்வொரு ஆண்டும் கல்வியாண்டு நாட்காட்டியை வெளியிடுகிறது. 2024- 25 ஆம் கல்வி ஆண்டிற்கான நாட்காட்டில் 220 வேலை நாட்கள் என்று முதலில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், அதனை 210 ஆக குறைத்து திருத்தப்பட்ட நாட்காட்டியையும் கல்வித்துறையானது சமீபத்தில் வெளியிட்டு இருந்தது.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
இந்நிலையில் இந்த கல்வி ஆண்டிற்கான நாட்காட்டியில் தெரிவித்தபடி பள்ளி மாணவ -மாணவிகளுக்கான காலாண்டு தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டு அதற்கான தேர்வு தற்போது தொடங்கியுள்ளது.
பிளஸ் 2 ,பிளஸ் 1 மாணவர்களுக்கான காலாண்டு தேர்வானது நேற்று தொடங்கிய நிலையில், இன்று 6 முதல் காலாண்டு தேர்வு தொடங்கியுள்ளது, மற்ற வகுப்புகளுக்கும் தேர்வு தொடங்க உள்ளது,
எனவே மொத்தத்தில் வருகிற 27ஆம் தேதிக்குள் வெள்ளிக்கிழமை காலாண்டு தேர்வை முடிக்கும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டு தேர்வு நடைபெற்று வருகிறது.
தேர்வு முடிந்ததும் வருகிற 28ஆம் தேதி சனிக்கிழமை முதல் இரண்டாம் தேதி புதன்கிழமை வரை 5 நாட்கள் காலாண்டு வரும் வரை அளிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .காலாண்டு விடுமுறைக்கு பின்னர் வருகிற மூன்றாம் தேதி வியாழக்கிழமை பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட இருக்கிறது.