மாணவர்கள் 12th தேர்வு முடிவை காண புதிய வசதி-அரசு அறிவிப்பு.. உடனே தெரிந்து கொள்ளுங்கள்!
TN HSC(+2) Results App Download
TN HSC(+2) Results App Download: பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஆப் மூலம் பார்க்கும் புதிய வசதியை ஏற்பாடு செய்துள்ளது தமிழக அரசு தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று காலை 9 மணிக்கு வெளியாக உள்ளது.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |

இந்த தேர்வு முடிவை பார்ப்பதற்காக சுமார் 8 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை எளிமையாக அறிந்து கொள்ளும் வகையில் மாணவர்களுக்கு செல்போன் மூலமாகவே தங்களது தேர்வு முடிவுகளை அறிந்து கொள்வதற்கு தமிழக அரசு புதிய ஆப் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த ஆப்பை google play store மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் இந்த ஆப்பை google play store-ல் ‘TN HSC(+2) Results’ என தட்டச்சு செய்து அந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டு மாணவர்கள் தங்களுடைய தேர்வு முடிவுகளை உடனடியாக பார்க்க முடியும்.
அதே போல அந்த ஆப்பிள் மாணவர்கள் தங்களது மதிப்பெண்களை மறுமதிப்பீடு செய்யும் வசதி என பல்வேறு பயனுள்ள தகவல்கள் அந்த ஆப்பில் உள்ளது. மேலும் மாணவர்கள் தங்களுடைய தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பாக வழங்கப்பட்டுள்ள இணையதளங்களின் மூலமாகவும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
அதேபோல மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அவர்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு பள்ளி கல்வித்துறையின் சார்பாக அனுப்பப்படும் குறுஞ்செய்தி எஸ்எம்எஸ் மூலமாகவும் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.
மேலும் மாணவர்கள் தங்களுடைய தேர்வு முடிவுகளை டிஜிட் லாக்கர் என்ற வெப்சைட் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம் இதில் மாணவர்கள் தங்களுடைய மதிப்பெண் சான்றுகளை டிஜிட்டலாக பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.