இந்திய ரயில்வேயில் 434 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! கல்வி தகுதி 12th, ITI, டிப்ளமோ உடனே விண்ணப்பிக்கவும்!
RRB Paramedical Recruitment 2025
RRB Paramedical Recruitment 2025: இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 434 பாராமெடிக்கல் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் செப்டம்பர் 8, 2025-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |

காலிப்பணியிடங்கள் மற்றும் தகுதிகள்
- நர்சிங் சூப்பிரண்டன்ட்: 272 காலியிடங்கள். ₹44,900 சம்பளம். 3 வருட ஜெனரல் நர்சிங் மற்றும் மிட்வைப்ரி படிப்பு அல்லது பி.எஸ்சி நர்சிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: 20-43.
- டயாலிசிஸ் டெக்னீசியன்: 4 காலியிடங்கள். ₹35,400 சம்பளம். பி.எஸ்சி பட்டம் மற்றும் டயாலிசிஸ் டிப்ளமோ அல்லது 2 வருட அனுபவம் அவசியம். வயது வரம்பு: 20-36.
- ஹெல்த் & மலேரியா இன்ஸ்பெக்டர்: 33 காலியிடங்கள். ₹35,400 சம்பளம். பி.எஸ்சி கெமிஸ்ட்ரி மற்றும் ஒரு வருட ஹெல்த் / சானிட்டரி இன்ஸ்பெக்டர் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு: 18-36.
- பார்மசிஸ்ட்: 105 காலியிடங்கள். ₹29,200 சம்பளம். 10+2 அறிவியல் பிரிவில் தேர்ச்சி பெற்று பார்மசியில் டிப்ளமோ அல்லது பி.பார்ம் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 20-38.
- ரேடியோகிராபர்: 4 காலியிடங்கள். ₹29,200 சம்பளம். 10+2 இயற்பியல் மற்றும் வேதியியல் பிரிவில் தேர்ச்சி பெற்று ரேடியோகிராபியில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு: 19-36.
- இ.சி.ஜி டெக்னீசியன்: 4 காலியிடங்கள். ₹25,500 சம்பளம். 10+2 அறிவியல் அல்லது பட்டப்படிப்புடன் இ.சி.ஜி டெக்னாலஜி சான்றிதழ் / டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 18-36.
- லேபரட்டரி அசிஸ்டென்ட்: 12 காலியிடங்கள். ₹21,700 சம்பளம். 10+2 அறிவியல் பிரிவில் தேர்ச்சி பெற்று டிப்ளமோ இன் மெடிக்கல் லேபரட்டரி டெக்னாலஜி (DMLT) முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு: 18-36.
விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வு முறை
- விண்ணப்பக் கட்டணம்: SC, ST, பெண்கள் மற்றும் சில பிரிவினருக்கு ₹250. மற்றவர்களுக்கு ₹500. கணினி வழித் தேர்வு எழுதிய பிறகு, கட்டணம் திருப்பி அளிக்கப்படும்.
- தேர்வு முறை: கணினி வழித் தேர்வு (CBT), ஆவண சரிபார்ப்பு, மற்றும் மருத்துவப் பரிசோதனை மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
எப்படி விண்ணப்பிப்பது?
விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள், ரயில்வே பணியாளர் தேர்வு வாரியத்தின் (RRB) அதிகாரப்பூர்வ இணையதளமான www.rrbchennai.gov.in மூலம் செப்டம்பர் 8, 2025-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படிக்கவும்.
- விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்: 09.08.2025
- விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 08.09.2025