மகளிர் உரிமைத்தொகை உதயநிதி கொடுத்த வாக்குறுதி உடனடியாக கிடைக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Magalir Urimai Thogai Latest Update 7 Nov
Magalir Urimai Thogai Latest Update 7 Nov: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டமானது தமிழகத்தில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரமானது முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பெயரில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கி வருகிறது திராவிட மாடல் தமிழக அரசு அந்த திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு உதவித்தொகையானது வழங்க வழிவகை செய்யப்படும் என்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள்.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |

தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு விளையாட்டு துறையில் வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல் மகளிர் மேம்பாட்டுக்கும் அனைத்து வகையிலும் நம் திராவிட மாடல் அரசு துணை நின்று வருகிறது.என்றும் சுய உதவி குழு சகோதரிகளுக்கு வங்கி கடன் வழங்கி வருகிறோம்.
பெண்களை வீட்டுக்குள் முடக்கி வைத்திருந்த ஆன் ஆதிக்க பிற்போக்கு தனத்தை தனது கைத்தடியால் அடித்து நொறுக்கியவர் தந்தை பெரியார் அவர்கள் ஒரு காலத்தில் பெண்கள் வீட்டு படியை தாண்ட கூடாது என்றார்கள் படிப்பதற்கான உரிமை இல்லாத நிலை இருந்தது ஆனால் இன்றைக்கு மகளிர் தொழில் முனைவோராக உயர்ந்து இருக்கிறார்கள் இதற்கெல்லாம் தொடக்க புள்ளி வைத்தவர் நமது முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் மகளிர் சுய உதவி குழுவினை இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டிலேயே தொடங்கினார்கள்.
அந்த வகையில் நமது முதலமைச்சரவர்கள் மகளிர் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள் நமது முதலமைச்சரவர்கள் பொறுப்பேற்ற முதல் நாள் ஐந்து திட்டங்களுக்கு கையெழுத்து விட்டார் அதில் முதல் கையெழுத்து பெண்களுக்கு விடியல் பயணம் கட்டணம் இல்லா பேருந்து வசதி திட்டத்தினை முதலமைச்சராக செயல்படுத்தினார்கள் இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மகளிருக்கும் மாதம் ரூபாய் 1000 ரூபாய் சேமிக்கிறார்கள்.
மகளிர்கள் காலையில் எழுந்து தமது பிள்ளைகளுக்கு சமைத்துக் கொடுக்க சிரமப்படக்கூடாது என்பதற்காக இந்தியாவிலேயே முதல்முறையாக முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தி திங்கள் முதல் வெள்ளி வரை ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கக்கூடிய 20 லட்சம் குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் பயன்பெறும் வகையில் முதலமைச்சர் அறிவித்துள்ளார் அதேபோல அரசு பள்ளியில் படித்து உயர்கல்வி படிக்கக்கூடிய மகளிர்க்கு புதுமைப்பெண் திட்ட மூலம் மாதம் ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த ஒரு திட்டம்தான் கலைஞர் மகளை உரிமை தொகை திட்டம் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் ஒரு கோடியே 16 லட்சம் மகளிருக்கு மாதம் ரூபாய் 1000 அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது திட்டத்தில் விண்ணப்பித்தவர்கள் ஒரு கோடியே 50 லட்சம் மகளிர் தான் சில பயனாளிகள் விடுபட்டுள்ளார்கள் விரைவில் கண்டிப்பாக தகுதி உள்ள அனைத்து மகளிருக்கும் மாதம் கலைஞர் மகளை உரிமை தொகை ரூபாய் 1000 வழங்கப்படும் என உறுதியினை நான் அளிக்கிறேன் என்று துணை முதலமைச்சர் திரு. மு க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.