Local Holiday For Sep 11
Local Holiday For Sep 11 மாணவர்களுக்கு குட் நியூஸ் வெளியாகியுள்ளது .சுதந்திர போராட்ட தியாகி இம்மானுவேல் சேகர் நினைவு நாள் முன்னிட்டு பள்ளி கல்லூரிகளுக்கு வருகின்ற செப்டம்பர் 11ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் பொது விடுமுறை நாட்களை தவிர்த்து அந்தந்த மாவட்டங்களில் பண்டிகை மற்றும் திருவிழாவை ஒட்டி உள்ளூர் விடுமுறைகள் அறிவிக்கப்படுவது வழக்கம். இந்த விடுமுறைக்கான வழக்கம் இந்த விடுமுறைக்கான உத்தரவை மாவட்ட அளவில் இருக்கின்ற மாவட்ட ஆட்சியர்கள் பிறப்பிக்கின்றனர் .அன்றைய தினம் பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
இந்த நிலையில் சுதந்திரப் போராட்ட தியாகி இம்மானுவேல் சேகரன் தென் மாவட்டங்களில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடினார். இவரது நினைவு தினத்தில் ஓட்டி செப்டம்பர் 11ஆம் தேதி உள்ளூர் விடுமுறையானது அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் வெளியிட்ட செய்தி குறிப்பு என்னவென்றால் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் நினைவு தினம் செப்டம்பர் 11ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. எனவே அன்றைய தினம் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி தாலுகாவில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மேலே குறிப்பிடப்பட்ட நாளில் அரசு தேர்வுகள் ஏதேனும் இருப்பின் சம்பந்தப்பட்ட தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள் தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தாது. குறிப்பாக இந்த விடுமுறை வங்கிகளுக்கு பொருந்தாது. இந்த விடுமுறையை ஈறு செய்யும் வகையில் வருகின்ற செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி 4 தாலுகாவிலும் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.