Google Pay Cash Back offer Nov 2024
கூகுள் பே (Google Pay) மூலம் பணம் அனுப்பும் கஸ்டமர்களுக்கும் ரூ.1001 கேஷ் பேக்
Google Pay Cash Back offer Nov 2024 : இந்தியாவில் கூகுள் பே (Google Pay) மூலம் பணம் அனுப்பும் கஸ்டமர்களுக்கும் அந்த நிறுவனம் ரூ.1001 கேஷ் பேக் (Rs 1001 Cashback) ஆஃபரை கொடுக்கிறது. இந்த ஆஃபர் நவம்பர் 7ஆம் தேதிக்குள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இந்த கூகுள் பே தீபாவளி கேஷ்பேக் (Google Pay Diwali Cashback) ஆஃபரை எப்படி பெறவது? எந்த ஸ்கிராட்ச் கார்டை பயன்படுத்துவது? உள்ளிட்ட முழு விவரங்களையும் இப்போது தெரிந்து கொள்ளலாம்.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
கூகுள் பே மூலம் குறிப்பிட்ட பணப்பரிவர்த்தனை செய்யும் அனைத்து கஸ்டமர்களுக்கும் ரூ 1001 கேஷ்பேக் சலுகையை களமிறக்கி இருக்கிறது. இதற்கு நீங்கள் 6 லட்டுகளை வாங்க வேண்டி இருக்கும்.
ரூ 1001 கேஷ்பேக் பெறுவதற்கு ஸ்கார்ட்ச் கார்டை போலவே 6 லட்டுக்களை சேகரிக்க வேண்டும். இதற்கும் கூகுள் பே மூலம் பணப்பரிவர்த்தனை செய்தால் போதும், கூகுள் பே லட்டுக்கள் (Google Pay Laddoos) உங்களுக்கு கிரெடிட் செய்யப்படும்.
கூகுள் பே லட்டுக்களை பெறுவது எப்படி? உங்களது கூகுள் பே ஆப்பை ஓப்பன் செய்து, கீழே செல்லுங்கள். ஆஃபர்கள் மற்றும் ரிவார்ட்கள் பக்கத்தில் லட்டுஸ் ஐகான் தோன்றும். அதை கிளிக் செய்து உள்ளே சென்றால், 6 லட்டுக்களுக்கான ஆஃபர் பக்கம் இருக்கும். அதோடு இந்த லட்டுக்களை எந்த பரிவர்த்தனைகள் மூலம் பெற வேண்டும் என்பதும் குறிப்பிடப்பட்டிருக்கும்.
எந்தெந்த பரிவர்த்தனைகள்? கூகுள் பே மூலம் வழக்கமாக கடைக்களுக்கு சென்று ஸ்கேன் செய்து பணம் செலுத்துவது (குறைந்தபட்சம் ரூ 100). உங்கள் மொபைலுக்கு ரீசார்ஜ் செய்வது அல்லது பில் செலுத்துவது (குறைந்தபட்சம் ரூ 100). கிஃப்ட் கார்டை வாங்குவது (குறைந்தபட்சம் ரூ 200). யுபிஐ மூலம் மூலம் கிரெடிட் கார்டு பில் செலுத்துவது மற்றும் நண்பருக்கு லட்டு பரிசளிப்பது.
மேற்கண்ட பரிவர்த்தனைகளை செய்யும்போது, உங்களுக்கு 6 லட்டுகளும் கிரெடிட் செய்யப்படும். இதன் பிறகு அந்த லட்டுகளை கேஷ்பேக் ஸ்கிராட்ச் கார்டுகளாக கிளைம் செய்து கொள்ள வேண்டும். அதன்பிறகு வழக்கமாக ஸ்கிராட்ச் கார்டை பயன்படுத்தி கேஷ்பேக் பெற்று கொள்ளலாம். இப்போது, லட்டுகளை வைத்து ஸ்கிராட்ச் கார்டு கிளைம் எப்படி என்பதை பார்ப்போம்.
முன்பை போலவே கூகுள் பே ஆப்பை ஓப்பன் செய்து கொள்ளுங்கள். ஆஃபர்கள் மற்றும் ரிவார்ட்கள் பக்கத்தில் தோன்றும் லட்டு பக்கத்துக்கு செல்லுங்கள். இப்போது, 6 லட்டுகள் பெற்ற பிறகு கிளைம் ஃபைனல் ரிவார்ட் (Claim Final Reward) டேப் தோன்றும். அதை கிளிப் செய்தால், மீண்டும் கிளைம் ரிவார்ட் (Final Reward) தோன்றும். அதையும் கிளிக் செய்து கொள்ளுங்கள்.