Gas Cylinder Restrictions: Major Change Affecting These Consumers!
சிலிண்டர் வாங்குவதில் புதிய கட்டுப்பாடு! இனி இவர்களுக்கு சிலிண்டர் கிடைக்காது!
Gas Cylinder Restrictions
Gas Cylinder Restrictions : வீடுகளில் சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு முக்கியத் தகவல். தற்போது, ஒரு சிலிண்டர் காலியானதும், பயனர்கள் அடுத்த சிலிண்டரை முன்பதிவு செய்து பெற்று வருகின்றனர். இதில், மத்திய அரசு ஆண்டுக்கு முதல் 12 சிலிண்டர்களுக்கு மானியம் வழங்கி வருகிறது.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |

இந்நிலையில், சிலிண்டர் வாங்குவதில் புதிய கட்டுப்பாடு ஒன்று அமலுக்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம், ஒரு நிதியாண்டில் 15 சிலிண்டர்களுக்கு மேல் வாங்குபவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் அவர்களின் முன்பதிவு ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைக்கு காரணம் என்னவென்று இந்தியன் ஆயில் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர்கள் வேறு வணிக நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுவதை தடுக்கும் நோக்கிலேயே இந்த புதிய கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், பதிவு கோரிக்கை நிராகரிக்கப்பட்ட பயனர்கள் கவலைப்படத் தேவையில்லை. அவர்கள் அருகிலுள்ள எரிவாயு விநியோகஸ்தர் அலுவலகத்திற்கு சென்று, சிலிண்டர் தேவைக்கான சரியான காரணத்தை எழுத்துப்பூர்வமாக அளித்து சிலிண்டரைப் பெற்றுக்கொள்ளலாம் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனவே, வீட்டு உபயோக சிலிண்டர்களை பயன்படுத்துபவர்கள் இந்த புதிய கட்டுப்பாட்டை கவனத்தில் கொள்வது அவசியம். உங்களுக்கு ஆண்டிற்கு 15 சிலிண்டர்களுக்கு மேல் தேவைப்பட்டால், அதற்கான காரணத்தை முறையாக விநியோகஸ்தரிடம் தெரிவித்து சிலிண்டரைப் பெற்றுக்கொள்ளலாம்.