மாதம் ரூ. 18000 ஊதியத்தில் அரசு மருத்துவமனையில் எக்கச்சக்க வேலைவாய்ப்பு! உடனே அப்ளை பண்ண இதை படிங்க!..
DHS Recruitment 2024 Ramanathapuram Apply
DHS Recruitment 2024 Ramanathapuram Apply அரசு மருத்துவமனையில் மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் கீழ் காலியாக இருக்கின்ற பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாளர் வெளியாகியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் சுகாதார ஆய்வாளர் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் தூய்மை பணியாளர்கள் என 18 ஆயிரம் வரை மாத ஊதியத்துடன் 60க்கும் மேற்பட்ட அதிகமான பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |

எனவே விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் செப்டம்பர் 24ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தமிழக அரசு சார்பாக பல்வேறு வேலைவாய்ப்பு முகாம் மற்றும் சொந்தமாக தொழில் தொடங்குவதற்கான பயிற்சி அளித்தின் பிரபல நிறுவனமான டாட்டா நிறுவனத்துடன் இணைந்து தமிழகத்தில் உள்ள வேலை வாய்ப்பு முகாம் அலுவலகத்தின் மூலம் பணியாளர்கள் தேர்வானது நடைபெற்று வருகிறது. இதே போன்று அரசு சார்பில் அரசு மருத்துவமனைகளில் வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தி ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை தேர்வு செய்து வருகின்றார்கள்.
இதன் ஒரு பகுதியாக தான் ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் தேர்வானது நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் அறிவித்துள்ளார். இதன் அடிப்படையில் மருத்துவ நலச்சங்கம் சார்பாக தேர்வு நடைபெற உள்ளதாகவும் ராமநாதபுரம் மற்றும் பரமக்குடி சுகாதார மாவட்ட அலுவலகம் அதன் கீழ் இயங்கி வருகின்ற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் துணை சுகாதார நிலையம் தூய்மை பணியாற்றினார் என 60க்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதவி மற்றும் காலிடங்கள் :
1 டேட்டா எண்டரி ஆப்பரேட்டர், 1 ப்ளாக் டேட்டா எண்டரி ஆப்பரேட்டர், 21 இடைநிலை சுகாதார பணியாளர், 13 சுகாதார ஆய்வாளர், 1 பிசியோதெரபிஸ்ட், 2 தூய்மை பணியாளர்கள், 1 ஓட்டுநர் ஆகிய பணிகள் உள்ளது. வயது வரம்பு 45-க்குள் இருக்க வேண்டும்.
தகுதிகள்:
இடைநிலை சுகாதார பணியாளர் பணிக்கு GNM/B.Sc (Nursing) முடித்திருக்க வேண்டும். டேட்டா எண்டரி ஆப்ரேட்டர் பதவிக்கு ஏதேனும் ஒரு டிகிரி படிப்பு முடித்திருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நன்றாக டைப்பிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
சுகாதார ஆய்வாளர் பணிக்கு 2 ஆண்டுகள் பயிற்சி படிப்பு, 10-ம் வகுப்பில் தமிழ் மொழியை ஒரு பாடமாக கொண்டு படித்திருக்க வேண்டும். பிசியோதெரபிஸ்ட் பதவிக்கு இளநிலை பிசியோதெரபிஸ்ட் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தூய்மை பணியாளர் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றதோடு ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கும் வேண்டும்.
சம்பள விவரம் :
1. சுகாதார ஆய்வாளர் பதவிக்கு ரூ.14 ஆயிரம் ரூபாய், தூய்மைப் பணியாளர் பதவிக்கு ரூ.8,500. 2. பிசியோதெரபிஸ்ட் பதவிக்கு ரூ.13,5000, ஓட்டுநர் பதவிக்கு 13,500 ரூபாய். 3. டேட்டா எண்டரி ஆப்ரேட்டர் பதவிக்கு ரூ.13,500. 4. இடைநிலை சுகாதார பணியாளர் பதவிக்கு ரூ.18,000.
விண்ணப்பிக்கும் முறை:
https://ramanathapuram.nic.in இணையதள பக்கத்திற்கு சென்று அதில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து ராமநாதபுரம் மாவட்ட நலவாழ்வு சங்கத்திற்கு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சென்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் செப்டம்பர் 24-ம் தேதி ஆகும்.
Notification PDF- Click Here
Application Form- Click Here