Request to grant 9 days quarterly examination leave
9 நாட்கள் காலாண்டு தேர்வு விடுமுறையை அளிக்க கோரிக்கை
Request to grant 9 days quarterly examination leave : பொதுவாக பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அரையாண்டு விடுமுறை முழு ஆண்டு விடுமுறை என ஒவ்வொரு பருவமாக தேர்வுகள் நடந்து முடிந்த பிறகு விடுமுறையானது வழங்கப்படுவது வழக்கமாக இருக்கும் அந்த வகையில் இந்தாண்டு காலாண்டு விடுமுறையானது எப்போது என்று பள்ளிக்கல்வித்துறை அதன் கல்லூரி வேலை நாட்கள் அட்டவணையில் தெரிவித்துள்ளது.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
செப்டம்பர் 27 வெள்ளிக்கிழமை உடன் காலாண்டு தேர்வானது நிறைவடைகிறது அதனை தொடர்ந்து செப்டம்பர் 28ஆம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரை 5 நாட்கள் காலாண்டு விடுமுறையானது பள்ளிக்கல்வித்துறை வேலை நாட்கள் பட்டியலில் ஏற்கனவே அறிவித்துள்ளது.
இந்த நிலையில் இதில் உள்ள ஐந்து நாட்களில் வழக்கமாக உள்ள சனி, ஞாயிறு விடுமுறை மற்றும் அதன் பிறகு வருகின்ற அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அரசு விடுமுறை அவ்வாறு பார்க்கும் போது காலாண்டு விடுமுறையாக இரண்டு நாட்கள் மட்டுமே கூடுதலாக விடுமுறையானது விடப்படுகிறது.
இந்த இரண்டு நாட்களில் மாணவர்கள் தேர்வு எழுதிய விடைத்தாள்களை திருத்தி அதற்கான மதிப்பெண்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் பணிகள் உள்ளது எனவே அக்டோபர் மாதம் முதல் வாரம் விடுமுறை அளிக்க வேண்டும் என்று ஆசிரியர் சங்கங்களில் இருந்து கோரிக்கையானது வைக்கப்பட்டுள்ளது.
அவர்களின் கோரிக்கை படி அக்டோபர் 7ம் தேதி திங்கட்கிழமை பள்ளிகள் திறக்க வேண்டும் என கோரிக்கையானது வைக்கப்பட்டுள்ளது அவ்வாறு விடுமுறை விடும் பட்சத்தில் காலாண்டு விடுமுறையானது 9நாட்களாக அதிகரிக்கும் ஆசிரியர் சங்கங்களின் இந்த கோரிக்கையை பள்ளிக்கல்வித்துறை ஏற்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.