மிலாடி நபி கொண்டாடப்படும் தேதி மாற்றம்.. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!.. Miladu Nabi Date Changed Tamilnadu Sep 17 See Now

Miladu Nabi Date Changed Tamilnadu Sep 17

Miladu Nabi Date Changed Tamilnadu Sep 17 இஸ்லாமிய கொள்கைகளை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக எளிமையான போதனைகள் மூலம் மக்களிடம் கொண்டுவந்து சேர்த்தவர் முகமது நபி ஆவார். இவர் கி.பி. 570 ஆம் ஆண்டு ரபி உல் அவல் மாதம் எனப்படும் இஸ்லாமிய நாட்காட்டியின் மூன்றாவது மாதத்தின் பனிரெண்டாம் நாளில் பிறந்துள்ளதால் அந்த நாளை மிலாடி நபியாக மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.

Miladu Nabi Date Changed Tamilnadu Sep 17
Miladu Nabi Date Changed Tamilnadu Sep 17

எல்லாம் வல்ல இறைவனின் இறைத்தூதரான நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், இஸ்லாம் மதத்தை தேற்றுவித்ததோடு, மறை நூலான திருகுர்ஆனை உலகுக்கு அறிவித்தவர். இவரது பிறந்தநாளே, மிலாதுன் நபியாக கொண்டாடப்படுகிறது.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group  Join
 Whatsapp Channel Join

மிலாது நபியன்று முகம்மது நபியின் போதனைகளை போற்றும் விதமாக இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை வாசிப்பது மிக முக்கிய கடமையாக வைத்துள்ளனர். பெரும்பாலான இஸ்லாமியர்கள் இந்த நாளில் நோன்பு வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இவர்கள் ஏழை எளிய மக்களுக்கு உணவு மற்றும் உடைகளை தானமாக வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அந்த வகையில் செப்டம்பர் 16ஆம் தேதி மிலாடி நபியாக கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது செப்டம்பர் 17ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மிலாடி நபியாக கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு அரசு தலைமை காஜி அவர்கள் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த ஆண்டு மிலாது நபி செப்டம்பர் 17-ஆம் தேதி கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார். பொதுவாக இஸ்லாமிய பண்டிகைகள் அனைத்தும் பிறை தெரிவதன் அடிப்படையிலேயே கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு மிலாடி நபிக்கான பிறை செப்டம்பர் 27 ம் தேதி மாலையே தென்பட்டது. அதனால் செப்டம்பர் 28 ம் தேதி மிலாடி நபி கொண்டாடப்பட்டது. சவுதி அரேபியாவில் செப்டம்பர் 27 ம் தேதியே மிலாடி நபி கொண்டாடப்பட்டது.

Leave a Comment

error: Content is protected !!