அதிர்ச்சி தமிழகத்தில் 2 நாள் கடையடைப்பு இன்றும் நாளையும் வெளியான முக்கிய தகவல் 2 days shop closure in Tamil Nadu today and tomorrow due to velliyan death

2 days shop closure in Tamil Nadu today and tomorrow due to velliyan death

தமிழகத்தில் 2 நாள் கடையடைப்பு இன்றும் நாளையும் வெளியான முக்கிய தகவல்

தமிழகத்தில் இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்கள் கடையடைப்பு நடத்தப்பட உள்ளதாக வணிக சங்க பேரவையின் பொதுச் செயலாளர் சௌந்தரராஜன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin
2 days shop closure in Tamil Nadu today and tomorrow due to velliyan death
2 days shop closure in Tamil Nadu today and tomorrow due to velliyan death

தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் தலைவர் வெள்ளையன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் எந்த கடையடைப்பு ஆனது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் வட மாவட்டங்களில் இன்று கடையடைப்பு நடைபெறும் என்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நாளை கடையடைப்பு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை இரண்டு முக்கிய வணிக சங்கம்கள் உள்ளன.

ஒன்று தற்போது மறைந்த வெள்ளையன் அவர்களின் தலைமையில் வணிகர் சங்க பேரவை மற்றொன்று விக்மராஜா அவர்களின் தலைமையில் செயல்பட்டு வரும் வணிக சங்க பேரமைப்பு எனக்கு இரண்டு சங்கங்கள் தற்போது தமிழகத்தில் மனிதர்களுக்காக உள்ளது.

இதில் வணிகர் சங்க பேரமைப்பு என்பது தமிழ்நாடு வணிக சங்க பேரவையில் இருந்து தனியாக பிரிந்து புதிய சங்கமாக மாறி தமிழ்நாடு வணிக சங்க பேரமைப்பு என்று உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு வணிக சங்க பேரவையின் தலைவர் வெள்ளையன் அவர்கள் நுரையீரல் தொற்று பிரச்சனை காரணமாக சென்னையில் உள்ள நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம். ஜி. எம். ஹெல்த் கேர் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருந்தார் அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சையானது அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.

இவரின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் இந்த நிலையில் தான் மறைந்த வெள்ளையன் உடல் நாளை பெரம்பூரில் உள்ள வணிக சங்க பேரவையின் கட்டிடத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.

இவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இரண்டு நாட்கள் கடையடைப்பானது தமிழக வணிகர் சங்க பேரவையில் உள்ள சங்கங்களில் செயல்படும் கடைகளுக்கு அழைப்பானது அறிவிக்கப்பட்டுள்ளது அதன்படி இன்று வட மாவட்டங்களிலும் நாளை தென் மாவட்டங்களிலும் கடையடைப்பானது நடத்தப்பட உள்ளது இந்த இரு தினங்களில் தமிழ்நாடு வணிக சங்க பேரவையின் கீழ் செயல்படும் கடைகள் அடைக்கப்பட உள்ளது இது தொடர்பான அறிவிப்பை தான் தமிழ்நாடு வணிக சங்க பேரவையின் பொதுச் செயலாளர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamilnadu Latest News

Leave a Comment